கணவர் தவிர வேறு ஆண்களுடன் தொடர்பில் இருக்கும் மனைவிகள் தான் குறி! கட்டிலில் வீழ்த்தி பலருக்கு விருந்தாக்கப்பட்ட குடும்ப பெண்கள்! சேலம் பகீர்!

சேலம் அருகே கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த புகாரில் கட்சி பிரமுகர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சேலம் ஆத்தூர் மந்தைவெளியை சேர்ந்த சின்னதுரை என்பவர் மக்கள் தேசம் கட்சியின் நகர செயலாளராக உள்ளார். ஜோதி நகரை சேர்ந்த மோகன்பாபுவும் இவரும் நண்பர்கள் இவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் செல்போன், முகநூல், வாட்ஸ்-அப் மூலம் பல பெண்களை தன்னுடைய நட்புக்குள் இணைத்துக் கொள்வார்கள். பின்னர் அவர்களை வேவு பார்த்து அந்த பெண்களில் யாராவது கள்ளக்காதலில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்டுபிடிப்பார்கள்.

அப்படி உள்ள பெண்களிடம் ஆதாரத்தை சேகரித்து கொண்டு மிரட்டுவார்கள். இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்றால் தங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என சின்னதுரை, மோகன்பாபு மிரட்டுவார்கள். பின்னர் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மிரட்டி அடைத்து வைத்து உல்லாசம் அனுபவிப்பார்கள். இதேபோல் 10க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அடைத்து வைத்து ஆசை தீர உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது மட்டுமின்றி அவர்களை பாலியல் தொழிலுக்கும் ஆட்படுத்தி உள்ளனர். இதற்கிடையே 2 பேர் வீட்டில் அடிக்கடி பெண்கள் வந்து செல்வதாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் மற்றும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த வீட்டில் 4 பெண்கள் மற்றும் சின்னதுரை, மோகன்பாபு ஆகியோர் இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் அழுதனர். போலீசாரின் விசாரணையில் மோகன்பாபு, சின்னதுரையும் சேர்ந்து 4 பெண்களை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததும், இதே போன்று பல பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்பாபு, சின்னதுரை ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்த பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.