சுழன்று அடித்த ஃபானி புயல்! தூக்கி வீசப்பட்ட கல்லூரிப் பெண்கள்! வைரல் வீடியோ!

புவனேஷ்வர்: ஃபானி புயலில் இருந்து தப்பிக்க, வீட்டின் கதவை சாத்த முடியாமல் இளம்பெண்கள் சிலர் போராடிய காட்சிகள், தற்போது வைரலாகப் பரவி வருகின்றன.


வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், தமிழகம், ஆந்திராவை கடந்து தற்போது ஒடிசாவில் மையம் கொண்டுள்ளது. இதையொட்டி, ஒடிசா மாநிலத்தில், 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஃபானி புயலை சமாளிக்க முடியாமல், பெண்கள் விடுதி ஒன்றில் இளம்பெண்கள் போராடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடுமையான புயல் காற்றுக்கு இடையே, திறந்திருந்த அறையின் முன்புற கதவை, அங்கு தங்கியுள்ள அனைத்து பெண்களும் சேர்ந்து மூட முயற்சிக்கின்றனர். நீண்ட நேரம் அவர்கள் போராடி, ஒருவழியாக, கதவை சாத்தி, தாழ்ப்பாள் போடும்போது, மறுபடியும் காற்றில் கதவு திறந்துவிடுகிறது.

இதைவிடக் கொடுமை, அந்த காற்றை தாங்க முடியாமல் அனைத்துப் பெண்களும் வீட்டின் உள்ளே பல்டி அடித்து விழுகின்றனர். இந்த வீடியோ காட்சி, பார்க்க பதைபதைப்பாகவும், புயலின் கொடூரத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளதால் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.