திரெளபதிகளின் தேசம் லடாக்? ஆம்! இங்கு ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள்!

லடாக் மிகவும் விசித்திரமான மாநிலம்.அநேகமாக இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய யூனியம் பிரதேசம்.


பரப்பளவில் கேரளாவைவிடப் பெரியது.59,196 ச.கிமீ  .தமிழகத்தின் பரப்பளவில் பாதி.மக்கள் தொகையோ மூன்று லட்சத்திற்கும் குறைவு.ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு நான்குபேர் வசிக்கிறார்கள். கார்கில் மற்றும் லே என்கிற இரண்டே நகரங்கள்.இதில் லேதான் தலை நகரம். அவளவுதான். லடாக்கில் 47% முஸ்லீம்களும்,45 % பெளத்தர்களும் வாழ்கிறார்கள்.

இந்துக்கள் ஐந்து சதம்தான்.லடாக மக்கள் முழுவதுமே இந்தியாவுடன் இணைந்திருக்கவே விரும்புகிறார்கள். இந்தியாவில் சிந்து நதி பாயும் பிரதேசம் இது மட்டுமே.லடாக்கை வைத்து பல வணிகக் கணக்குகள் போடப்படுகின்றன,அரசாலும்,பெருநிறுவனங்களாலும்.சிந்து நதி பாயும் பகுதிகளில் பெரிய அளவில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

அதோடு பெரும் பாலைவனப் பகுதி இருப்பதால் சூரிய சக்தி,காற்றாலை மின் உற்பத்திக்கும் நல்ல வாய்புகள் உள்ளன.மொத்த தார் சாலைகளின் நீளம் 400 கி.மீதான்.லடாக் என்பதற்கு அவர்களது மொழியில் கணவாய் களின் நிலம் என்று பொருள்.இதெல்லாம் உங்களுக்கு விக்கிப் பீடியாவிலேயே கிடைக்கக் கூடிய தகவல்கள்தான் .

ஆனால் லடாக்கில் இன்னொரு வித்தியாசமான வழக்கம் இருக்கிறது. இங்கே ஒரே பெண் பல ஆண்களை மனந்து கொள்ளலாம்.இரண்டு பேர் முதல் ஐந்து பேர்வரை ஒரு பெண்ணுக்கு கணவர்கள் இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் இமாச்சலப் பிரதேசம், உ.பி,சிக்கிம்,இலங்கை,கிழக்கு ஆப்பிரிக்கா,அலாஸ்க்கா போன்ற இடங்களில் இந்த வழக்கம் இருந்தது.

கேரளத்தில்கூட குறிப்பிட்ட ஒரு ஜாதியில் மட்டும் அந்த வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால்,லடாக்கில் இதை மிகச் சாதாரணமாக கடைபிடிக்கின்றனர். முக்கியமாக ஒரு குடும்பத்தில் இருக்கும் சகோதரர்கள் அத்தனை பேரையும் ஒரே பெண் மணந்து கொள்கிறாள். பிறக்கும் குழந்தைகள் தங்கள் அம்மாவின் கணவர்கள் அத்தனை பேரையும் அப்பாவாகவே பார்க்கிறார்கள்.

அப்பாக்களும் அப்படியே. இந்தத் தாய்வழி சமூக அமைப்புக்கு காரணம்,ஒருகாலத்தில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கும் நிலம் பிரிந்து போய்விடக் கூடாது என்பதற்காக கடைபிடிக்க பட்டது என்கிறார்கள்.இப்போது லடாக்கிய ஆண்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு நீண்டகாலம் பிரிந்திருப்பதால்,பெண்ணையும் அவள் குழந்தைகளைய பார்த்துக்கொள்ள அவளுக்கு இன்னொரு கணவன் தேவைப்படுகிறான்.

இதெல்லாம் வெளியில் இருந்து வருவோருக்குத்தான் அதிசயம்.அவர்கள் எளிமையாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.சாலைகளில் மேகங்கள் உலவும் தேசம்,மிகப்பெரிய ஏரிகள் இருக்கின்றன.இதுவரை வசதிகள் குறைவு என்றாலும் இனி சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும்.பெரும் வியாபார நிற்வனங்கள் வந்து இறங்கும்.அவற்றை இந்த எளிய மனிதர்கள் எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை காலம் தீர்மானிக்கும்.

இதைப்படித்து விட்டு எல்லா லடாக்கியர்களும் இப்படித்தான் என்று நினைத்து விடாதீர்கள். டார்ட் என்கிற பழங்குடிகளிடையே  மட்டுமே இந்த தாய்வழிச் சமூக முறை இருக்கிறது. தான்னு,டார்ச்சிக்,கார்க்குன் ஆகிய மூன்று கிராமங்களில் வசிக்கும் இந்த மக்களை ' இவர்கள்தான் உண்மையான ஆரியர்கள் என்றும் அலக்சாண்டர் படை எடுப்பின் போது அவருடன் வந்து இங்கேயே தங்கிவிட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றி இரண்டுவிதமான யூகங்கள் இருக்கின்றன.