புருசன் இல்லாம குழந்தை இருந்தாலும் குடும்பம் தான்..! பெரும் வரவேற்பை பெற்ற நடுத்தர வயது பெண்ணின் புதிய முயற்சி!

கொச்சி: குழந்தையுடன் தனித்து வாழும் பெண் அல்லது ஆண் கூட ஒரு குடும்பம்தான், என்ற நோக்கில் கேரள பெண் ஒருவர் வித்தியாசமான சமூக நிகழ்வை முன்னெடுத்துள்ளார்.


துபாயை சேர்ந்தவர் லைலா ஜாஃபர். திருமணமாகி கணவனை பிரிந்த இவர், தனது குழந்தையுடன் கொச்சிக்குத் திரும்பி வந்துவிட்டார். அடிப்படையில் வழக்கறிஞரான லைலா, தனது மகனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு, எங்கேயும் செல்ல முடியாமல் தவித்து வந்தார். எங்கு சென்றாலும் மகனை தன்னுடனே அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால், வேலை ரீதியாகவும் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது.  

இதையடுத்து, லைலா ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்தார். இதன்படி, தன்னைப் போல, துணையை இழந்து, குழந்தைகளுடன் தனியே வசிக்கும் ஆண் அல்லது பெண்களை ஒரு முழு குடும்பமாக அங்கீகரித்து, அவர்கள் கலந்துரையாடும் வகையில் ஒரு இன்ஸ்டாகிராம் பேஜ் தொடங்கியுள்ளார். அந்த பேஜ் வழியாக, கணவனை இழந்த பெண்கள் லைலாவின் வீட்டிற்கு நேரில் சென்று, சில மணிநேரம் ஒன்றாக நேரம் செலவிட்டு, தங்களது மனநிலையை வலுவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கான பயிற்சிகளை லைலா செய்து தருகிறார். இதன்மூலமாக, குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற சுமை குறைய தொடங்கியுள்ளதாக, இதில் பங்கேற்கும் பெண்கள் குறிப்பிடுகின்றனர். நீங்களும் பங்கேற்க விரும்பினால், #Seeyouatthevillage என்கிற இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்...