என்னிடம் விசாரணை நடத்தாமலே தற்காலிக நீக்கம் செய்தீர்கள்! - ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம்..

தி.மு.க.வின் கோட்டையில் இருந்து பறந்துபோன கு.க.செல்வத்தை கட்சியில் இருந்து நீக்காமல், கேள்வி கேட்டு கடிதம் அனுப்பிவைத்தார் ஸ்டாலின். அந்த கடிதத்துக்குப் பதில் கடிதம் எழுதி ஸ்டாலினை கதற விட்டுள்ளார் கு.க.செல்வம்.


இன்று கு.க.செல்வம் எழுதிய கடிதத்தில், ‘என்னிடம் விசாரணை நடத்தாமலே என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். இது இயற்கை நீதிக்குப் புறம்பானது. ஆகவே தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெற வேண்டும்.

நான் பொய் சொன்னதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். என்ன பொய் சொன்னேன் என்று குறிப்பிடவில்லை. நான் அவதூறு பேசியதாக குறிபிட்டுள்ளீர்கள். அது என்ன அவதூறு என்றும் குறிப்பிடவில்லை.

தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வேறு எந்தக் கட்சித் தலைவர்களையும் பார்க்கக்கூடாது என்று எங்கேயும் நீங்கள் குறிப்பிடவே இல்லை. நம் தலைவர் கலைஞரை பாரதப்பிரதமர் மோடி சந்தித்திருக்கிறார். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது தவறு’ என்று கடிதம் போட்டுள்ளார்.

தி.மு.க.வினர் இதைக் கண்டு சிரித்துவருகின்றனர்.