விமான பணிப்பெண்ணிடம் பேன்ட் ஜிப்பை கழட்டி காட்டிய இளைஞன்! நடுவானில் அதிர வைக்கும் காரணம்!

விமானத்தில் புகைப்பிடிக்கத் தடை என்று சொன்னதற்காக, விமானப் பணிப்பெண்ணிடம் பேன்ட் ஜிப்பை கழட்டி காட்டி சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.


கேரளா மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஷாஹித் சம்சுதீன் (24 வயது). இவர் சவூதியில் இருந்து சவூதி ஏர்லைன்ஸ் மூலமாக, டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, நடுவானில் சிகரெட் பிடிப்பதற்காக, லைட்டரை எடுத்துள்ளார். இதைக் கவனித்த விமான பணிப்பெண் புகை பிடிக்கத் தடை உள்ளதாகக் கூறியுள்ளார்.

இதன்போது, அப்துல் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென தனது பேன்ட் ஜிப்பை கழட்டி காட்டி, ஆபாசமாக அப்துல் விமான பணிப்பெண்ணிடம் பேசியுள்ளார். உடனே அவர் சக ஊழியர்களை உதவிக்கு அழைக்க, அவர்கள் விரைந்து வந்து அப்துல்லை கையும் களவுமாக பிடித்தனர். விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் உடனடியாக, ஏர்போர்ட் போலீசாரிடம் அப்துல் ஒப்படைக்கப்பட்டார்.

அவர்கள் டெல்லி போலீசாரிடம் அவரை ஒப்படைக்க, உரிய விசாரணை நடத்திய போலீசார், பெண்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டது, அத்துமீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அப்துல்லை சிறையில் அடைத்தனர்.  சவூதியில் எலக்ட்ரிஷியன் வேலை செய்து வந்த அப்துல், நாடு திரும்பும் வழியில் இப்படி சில்மிஷம் செய்து போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.