என்னவள் உனக்கு! உன்னவள் எனக்கு! மனைவிகளை பறிமாறிக் கொண்ட விபரீத கணவன்கள்!

கேரளாவில் தங்களது மனைவிகளை மற்றொருவருக்கு உல்லாசம் அனுபவிக்க அனுப்பி விட்டு அவர்களது மனைவையை தான் உல்லாச அனுபவித்த கணவன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஆலப்புழா மாவட்டம் காயம்குளத்தைச் சேர்ந்தவர் ஷபின் ராஜ், டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து வரும் அவரது மனைவி வனஜா. வாழ்க்கை நன்றாகத் தான் சென்றுகொண்டிருந்தது, ஷபின்ராஜ் ஷேர் சாட் மூலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒருவருடன் நண்பர் ஆகும் வரை. 

அப்போது இருவரும் தங்கள் மனைவிகளை மாற்றிக் கொள்வதில் ஆர்வம் காட்டிப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர்கள் நாள் குறித்த நிலையில் ஷபின்ராஜ் இது குறித்து தனது மனைவி வனஜாவிடம் கூறி சம்மதிக்கச் செய்தார். வனஜாவை காரில் வைத்து அந்த நபருடன் உறவு கொள்ள வைத்துள்ளார். மேலும் அந்த நபரின் மனைவியுடன் தான் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

ஆனால் அதன்பிறகும், திருப்தியடையாத ஷபின், ஷேர்சாட் ஆப் மூலம், பிற ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே மனைவியை அழைத்துச் சென்று மனைவிகளை மாற்றிக்கொண்டு உல்லாசம் அனுபவிக்கத் தொடங்கினார். 

இந்நிலையில் சில பெண்களின் கணவர்கள் கொடூரமான முறையில் உறவு கொள்வதாகவும் அவர்களுடன் நெருக்கமாக இருக்க முடியாது என்றும் வனஜா கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் வனஜாவை அடித்துத் துன்புறுத்தியதோடு  இணங்க மறுத்தால் விவாக ரத்து செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒருமுறை மற்றொரு தம்பதி வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது இரு சக்கர் வாகனத்தில் இருந்து குதித்த  வனஜா நேராக காவல் நிலையத்துக்குச் சென்று தனது கேவல விவகாரங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்களின் கண்ணியத்திற்கு குந்தகம் விளைவித்தல், பாலியல் பலாத்காரம், கூட்டுப் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து ஷபின் ராஜ் மற்றும்  ஷேர் சாட் நண்பர்கள் பலரை கைது செய்தனர். 

ஆனால் இவர்களுடன் சேர்ந்து கணவர்களை மாற்றிக் கொண்ட பெண்கள் கைது செய்யப்படவில்லை. மேலூம் ஷபின்ராஜுக்கு இந்தப் பழக்கத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய கோழிக்கோட்டைச் சேர்ந்த நபரும் இன்னும் சிக்கவில்லை.