குதிரை காலில் விழுந்து ஊரே மன்னிப்பு கேட்கும் விநோதம்! விசித்திர சடங்குக்கு காரணம் தெரியுமா?

பட்டசணப் பிராட்டி கிராமத்தில் உள்ள செல்லசான்டியம்மன் ஸ்ரீ சந்தனக் கருப்பணசாமி கோவிலில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடப்பது வழக்கம்.


துலுக்கி திருவிழா, கரூரில் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கூடி கொண்டாடினர். இதன்படி வழக்கம் போல்அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.கோவிலுக்கு என்று வளர்க்கப்படும் குதிரையை அழைத்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அக்கோவிலின் கிளைக்கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

மேலும் பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு குதிரையின் காலில் விழுந்து ஊரார் மன்னிப்பு கேட்கும் சடங்குகள் நடைபெற்றன.கடைசியில் குதிரை துலுக்கி கோவிலுக்குள் ஓடியதால் திருவிழா நடத்துவதற்கான உத்தரவு கிடைத்துவிட்டது என மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு குதிரை காலில் விழுவதன் மூலம் செய்த தவறுகள் மன்னிக்கப்படும் என்றும் நினைத்தது நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். காலம் காலமாக இந்த சடங்கை செய்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.