அமைச்சர் மணிகண்டன் பதவி காலி! உற்சாகத்தில் கருணாஸ் அலப்பறை!

நேற்று திருப்பூர் மாவட்டம் ஆண்டிபாளையம் தரைபாலத்தை பார்வையிட வந்தார் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்.


அவரிடம் அமைச்சர் மணிகண்டன் பதவிபறிப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அமைச்சரோ அது பற்றிப் பேச விரும்பவில்லை என்று சொல்லி விட்டார்.ஆனால் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் அப்படி இல்லை.

ஏற்கனவே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் மணிகண்டனால் என் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி இருந்த கருணாஸ்,நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது,மணிகண்டனைப் பற்றி முதலில் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு வைத்தது நான்தான் என்றார்.

என்னால் என் சொந்தத் தொகுதியான திருவாடனைக்குள் நுழையகூட முடியவில்லை, நன்றிகூ சொல்ல அனுமதிக்கவில்லை.அவர் அகற்றப்பட்டு விட்டதால் இனி எனக்குப் பிரட்சினை இல்லை. பதவிக்காலம் முடியும்வரை திருவாடானை மக்களுக்கு பணியாற்றுவேன்.

அவர் பதவி இழந்ததில் எனக்கு வருத்தம்தான்,ஆனால் அதற்காக ராமநாதபுரம் மாவட்ட மக்கள், அதிமுக தொண்டர்கள்,அரசு அலுவலர்கள் அத்தனை பேரில் ஒரு பத்து பேர்கூட வருத்தப் படவில்லை என்று சிரித்தபடி சொன்னார்.

பலகிராமங்களில் பட்டாசு வெடித்தார்கள்.என்னை அவளவு அவமானப்படுத்தி இருக்கிறார்.இந்த விஷயத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. தன் வினை தன்னைச் சுடும் என்பது இதுதான்.அவருக்கு இதுமட்டுமல்ல இன்னும் இருக்கிறது என்று சொன்ன கருணாஸ் 'திருவாடனைக்கு விடுதலை கிடைத்துவிட்டது' என்று முடித்தார்.