கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி - 2

கர்நாடகா சுற்றுலாவில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால் உணவு. நாம் குஜராத். ராஜஸ்தான் போன்ற இடங்களுக்கு சென்றால் அங்கே நம்ப ஊர் சாப்பாட்டை சாப்பிடுவது கஷ்டம். ஆனால் தென்னிந்தியாவில் இருக்கும் கர்நாடகாவில் உணவு பிரச்சனை என்பது இல்லை. அங்குள்ள சாதாரண ஹோட்டலில் கூட உணவு மிக சுவையாக இருக்கும்.


ஆறாம் நாள்-  மே 20 செவ்வாய் கிழமை

மைசூரில்  இருந்து நேராக  காவேரி தாய் உற்பத்தி ஆகும் 20] தலைகாவேரி சென்று அங்கே நாம் சிவபெருமானையும், காவேரி தாயாரையும் தரிசிப்போம். பின் அங்கிருந்து நாம் அருகில் உள்ள கூர்க் வருவோம். எழில்கொஞ்சும் 21] கூர்க் 22] மடிகேரியை பார்த்த பின்னர் நாம் மடிகேரியில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவு உள்ள துபாரே வருவோம்.  அதன் பின்னர் அங்கிருந்து நாம் நேராக 23] துபாரே வனப்பகுதிக்கு செல்வோம். 

துப்பாரேவின் சிறப்புகள் 

1] இருபுறமும் உயர்ந்த மரங்களூம் பசுமையான செடிகளும் கொண்ட பச்சை பசேல் என இருக்கும் இடம். 

2] கடும் வெய்யில் காலத்தில் கூட இவ்விடம் சிலு, சிலு னு இருக்கும். வெய்யில் காலத்தில்  ஊட்டியில் இருக்கும் வெயில் கூட இங்க இருக்காதுங்க. காரணம் ஏற்கனவே  அங்கு இருந்த ஒரு சில கட்டிடங்களை தவிர்த்து இங்கே புதிதாக கட்டிடங்கள் கட்ட அனுமதியை கர்நாடக அரசு கொடுக்கவில்லை. 

3] இந்த துபாரே காட்டில் உள்ள ஒவ்வொரு மரமும் உண்மையில்  அந்த ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டது. இங்குள்ள மரங்கள் மட்டுமா ஆசிர்வதிக்கப்பட்டது? இங்கே செல்லும் நாமும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே. 

4] காவிரி இரு பிரிவாகப் பிரிந்து ஓடும் இடத்தில் நடுவில் இருக்கும் ஒரு தீவு மாதிரியான இடம் இந்த துபாரே. 

5] அன்று  காடுகளில் மரங்களை தூக்குவது போன்ற கடுமையான வேலைகளுக்காகவும் மற்றும் மைசூர் அரண்மனையில் நடக்கும் தசரா திருவிழா முதலானவற்றிற்காகவும் யானைகளுக்கு சிறப்பு பயிற்சி கொடுப்பதற்காக இங்கே யானை முகாம் அன்று உருவாக்கப்பட்டது. இன்று யானைகளை வைத்து இதுபோல் வேலை வாங்குதல் சட்டப்படி குற்றம். அதனால் இங்குள்ள  யானைகள்  மைசூர் அரண்மனையில் நடக்கும் தசரா திருவிழா போன்ற திருவிழாக்களுக்கு பயன்படுகிறது. மேலும் இங்குள்ள யானைகள் கோவில்களுக்கு விற்கப்படுகிறது. 

6] நமது கைகளால் இங்கு யானையை தேய்த்து குளிப்பாட்டலாம்.  இங்கு போல் வேறு எங்குமே  யானைகள் நம்மிடம் இவ்ளவு அன்பாக, நட்பாக பழகாது.

ஏழாம் நாள் - மே 21 செவ்வாய்க்கிழமை 

நாம் துபாரே டூ மைசூர் 120 கிலோமீட்டர் பயணம் செய்வோம். அன்று இரவு நாம் மைசூர் டூ சென்னை பஸ் மூலம் வருவோம்.

எட்டாம் நாள்- மே 22 ம் தேதி புதன்கிழமை காலை நாம் சென்னை வந்து விடுவோம்.  இந்த டூர் உங்களுக்கு எந்த அளவு சந்தோசத்தை கொடுக்கும் என்றால்  வரும் மே 23 

உங்களுக்கு பிடிக்காத கட்சி ஆட்சிக்கு வந்தால் கூட உங்கள் மனம் அதனால் பாதிக்கப்படாது.  இந்த நாட்டில் என்ன நடந்தாலும், எது நடந்தாலும் 23 அன்று உங்களின் உடலும், மனமும் குளு, குளு னு இருக்கும் . அதுக்கு நான் கியாரண்டி. சரி 15 முதல் 22 வரையிலான இந்த டூருக்கு எவ்ளோ? ஆகும் னு நீங்கள் ஆவலோடு கேட்பது புரிகிறது. 

மாவுக்கேத்த பணியாரம் 

பெங்களுர், மங்களூர், மைசூர் முதலான ஊர்களில் நல்ல AC ரூம் வேண்டும் என்றால் ரூம் ரேட் என்ன? ஆகும் என்பது உங்களுக்கு நல்லாவே தெரியும்.  மேலும் எனக்கு செலவு கூடுதலானாலும்  பரவாயில்லை என்று நான் இந்த டூர் ஐட்டனரி  யில் துபாரேவையும் சேர்த்து இருக்கிறேன். 

துபாரே கொஞ்சம் எக்ஸ்பென்சிவான ட்ரிப் தான். ஆனாலும் நம்ப அடிக்கடி கர்நாடகாவுக்கு வரப்போறதில்லை. இப்ப வந்தா அடுத்து எப்போ வருவோம் னு தெரியாது. அதனால் என்னோடு கர்நாடகா வருபவர்கள் அருமையான இந்த துபாரேவை மிஸ் பண்ணிட கூடாது என்பதால் நான் துபாரேவையும் சேர்த்து இருக்கிறேன். அதாவது  கர்நாடகாவில் உள்ள முக்கியமான ஹோலி  பிளேஸ், ஜாலி பிளேஸ் எதுவும் மிஸ் ஆகாத அளவு நான்  இந்த டூர் ஐட்டனரியை டிசைன் பண்ணி இருக்கேன். 

இந்த ட்ரிப்பில் நாம் மொத்தம் கர்நாடகாவில் மட்டுமே 1600 கிலோமீட்டர் வரை பயணம் செய்வோம்.  இந்த கர்நாடகா ட்ரிப்பில் 25 கும் மேற்பட்ட நபர்கள் வந்தால் 8 நாள் போக்குவரத்து செலவு, உணவு, எண்ட்ரன்ஸ் டிக்கெட் என அனைத்தும் சேர்த்து ஒரு நபருக்கு 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே. 25 க்கு கீழ் வந்தால் ஒரு நபருக்கான கட்டணம் 18 ஆயிரம். 20 க்கும் கீழ் வந்தால் ஒரு நபருக்கான கட்டணம் 20 ஆயிரம். 

இதுபோன்ற ஒரு சந்தோஷமான சுற்றுலாவிற்கு   நான் என் வாழ்நாளில் இதுவரை சென்றதில்லை என்று நீங்கள் அனைவரும் சொல்லும் அளவுக்கு இந்த ட்ரிப் இருக்கும். மே மற்றும் ஜூன் மாதத்தில் மட்டும் தான் நம்மால் கர்நாடகா ட்ரிப் செல்ல முடியும். ஜூலை மாதத்தில் இருந்து கர்நாடகாவில் கடும் மழை பெய்யும்.