முதலமைச்சரின் உறவினர் வீட்டில் ரூ.10 கோடி பறிமுதல்! வருமான வரித்துறை அதிரடி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

முதலமைச்சர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் நகைகள் ஆவணங்கள் உள்ளிட்டவை சிக்கின.


நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில் ஒருபுற பிரச்சாரம் அனல் பறந்துகொண்டிருக்க மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினரின அதிரடி சோதனைகள் பொறி பறந்து வருகின்றன. இதில் முக்கிய புள்ளிகளாக உலவிக் கொண்டிருப்பவர்களும் சிக்கியுள்ளனர்.

வழக்கம் போல இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிழைப்பவர்கள் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஷிமோகாவில் உள்ள பரமேஸ் என்பவர் தனது வீட்டில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க ஏராளமான பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது தனது வீட்டில் உள்ள ஒரு பீரோவை திறக்க பரமேஸ் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. சாவியை தொலைத்துவிட்டதாக அவர் கூறியதையடுத்து அதிகாரிகள் பீரோவின் பூட்டை உடைத்து திறந்து பார்த்த போது உள்ளே கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிய வந்தது. 6 கோடி ரூபாய் பணம், ஆவணங்களும் தங்க நகைகள், என 10 கோடி ரூபாய் மதிப்புள்ளவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.