காய் கடைகளில் கொத்தாக கட்டப்பட்டிருக்கும் காராமணி மீது பலருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. இந்த காராமணியில் எத்தனை சத்து இருக்கிறது என்று தெரிந்துகொண்டால் நிச்சயம் பயன்படுத்தத் தொடங்குவார்கள்.
காராமணி கர்ப்பணிகளுக்கு ரொம்பவும் நல்லது, ஏன்னு தெரியுமா?
காராமணியில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் அதிக அளவு இருக்கின்றன. புரதச்சத்து குறைவாக இருப்பவர்களுக்கு காராமணி, கண்கண்ட மருந்தாக உதவுகிறது.
·
உடல் எடை குறைய விரும்புபவர்கள் காராமணி சாப்பிட்டால், எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும்கு. உணவு அதிகம் சாப்பிடத்தூண்டாது என்பதால் எடை குறையத்தொடங்கும்.
·
கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறையவே இருக்கிறது. குழந்தையின் நரம்பு மண்டலத்தை இந்த ஃபோலேட் சத்துதான் நிர்ணயிக்கிறது.
·
காராமணியில் வைட்டமின் சி நிரம்பியிருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
·
எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கால்சியம், மெக்னீஸியம், பாஸ்பரஸ் காராமணியில் இருக்கிறது.
கொலஸ்ட்ரால் அளவையும் நீரிழிவு நோயையும் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை காராமணிக்கு உண்டு என்பதால் வாரம் ஒரு முறை கண்டிப்பாக பயன்படுத்துவது நல்லது.