உள்ளாட்சித் தேர்தல் திமுக கூட்டணியில் விரிசல்..! தனித்து போட்டியிடுகிறது காங்கிரஸ்..! அதிரடி திருப்பம்!

உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டி போடும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் எதிர்எதிரே போட்டியிடுவது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி கூட்டணியாக போட்டியிட்ட நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகின்றன. ஆனால் கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ் இடையே வார்டுகளைப் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் அந்தக் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பிரச்சனை கட்சி தலைமை வரைக்கும் செல்லும் இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தொண்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 11 பஞ்சாயத்து வார்டுகளில் மேற்கு மாவட்டத்தில் 6 வார்டுகள் உள்ளன. ஆறு வார்டுகளைப் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் தி.மு.க-வும் காங்கிரஸும் தனித்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் 6 மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் மற்றும் 68 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும், ஊராட்சிகளிலும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது காங்கிரஸ். தி.மு.க.வும் கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. 

மாவட்டப் பஞ்சாயத்தின் 6 வார்டுகளில் 3 வார்டுகளில் காங்கிரஸ் சிட்டிங் கவுன்சிலர்கள் இருந்த பகுதி. அவற்றை தர கூட்டணிக் கட்சியினர் சம்மதிக்காததால் தனித்துப் போட்டியிடுவதாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். 

அதே சமயம் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், மேல்புறம், கிள்ளியூர் வார்டுகளில் கடைசியாக காங்கிரஸ் கட்சி இருந்ததால் அவர்களின் வார்டு எனக் கூறுகிறார்கள். கூட்டணியாகப் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், 4 மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகளில் திமுக, 2 வார்டுகளில் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதாக தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.