அடடே, கனிமொழி களத்தில் இறங்கிட்டார். சேறு, தண்ணீரில் நடந்தே போகிறார்..! தூத்துக்குடி மக்கள் பாராட்டு.

அரசியல்வாதிகள் வாய் கிழியப் பேசுவார்கள். ஆனால், எதையும் செய்ய மாட்டார்கள். அந்த வகையில் சொன்னதை செய்கிறார் கனிமொழி என்று தூத்துக்குடி வாக்காளர்கள் வாயெல்லாம் பல்லாக இருக்கிறார்கள்.


ஆம், மழை பெய்து ஊரெங்கும் சகதிக் காடாகவும், வெள்ளமாகவும் இருக்கும் நேரத்தில் களத்தில் இறங்கிவிட்டார் கனிமொழி. அவர் சேறு, சகதிகளில் இறங்கி வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு உத்தரவும் போட்டார். 

இதுதவிர மாதம் ஒரு முறை கண்டிப்பாக தூத்துக்குடி வருவேன் என்று சொல்லியிருந்ததையே நிறைவேற்றுகிறார் என்கிறார்கள். விளம்பரமோ, என்னவோ மக்கள் பிரச்னையை அறிவதற்காக ரோட்டில் இறங்கினாரே, அதற்காகவே கனிமொழிக்கு ஒரு ஜே போடலாம்.