முதல் குழந்தை பிறந்து 11 மாதங்கள் தான்..! 2வது குழந்தையை பெற்றெடுத்த பிரபல நடிகரின் மனைவி!

கன்னட திரையுலகில் முதன்முதலாக அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படத்தில் நடித்து புகழ்ப்பெற்ற நடிகர் வெளியிட்ட போட்டோ சமூக வளையதளங்களில் சினிமா ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது.


ஒரே படத்தில் புகழ்ப்பெற்று ராக்கிங் ஸ்டார் என கர்நாடாகத்தில் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் யஷ் பல வெற்றி படங்களை தந்துள்ள நிலையில் தமிழில் டப்பிங் செய்யப்பட்ட கே.ஜி.எப் படம் அமொக வரவேற்ப்பை பெற்றது. 

ஒரே படத்தில் தமிழகத்தில் பிரபலமான யஷ் 2016 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஐரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையான யஷ் அந்த குழந்தையின் விரல்களை போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஏற்கனவே யஷ் இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆக போவதாக டுவிட்டரில் பதிவிட்டபோது, ரசிகர்கள் இப்பொழுது தான் ஒரு குழந்தை பிறந்துள்ளது அதற்குள் அடுத்த குழந்தையா என கேள்வி கேட்டு விமர்சணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.