கழுத்தில் பாம்பு! கையில் சூலம்! ஒற்றை எலுமிச்சை! தீராத நோய்களை தீர்க்கும் கபிலா அம்மன்..?

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பக்தர்களின் வருகையை அதிகரிக்க பாம்புடன் நின்று பெண் சாமியார் அருள் வாக்கு கூறிய சம்பவம் நடைபெற்று வருகிறது.


ரன் என்ற ஒரு திரைப்படத்தில் நடிகர் விவேக் எப்படி சாமியாராக மாறுகிறார் என்ற காட்சிகள் இருக்கும். நண்பனை தேடி சென்னை வரும் அவர் உடமைகள் அனைத்தும் இழந்து குட்டிப் பாவாடையுடன் சென்னை மக்களுக்கு சாபம் விடுப்பார். இந்தை பார்த்த பொதுமக்கள் அவருக்குள் சாமி வந்துவிட்டதாக கருதி அவரையே அருள்வாக்கு சொல்லும் சாமியாராக அங்கீகரித்துக் கொள்வார்கள். அதன் பின்னர் அவர் ஓஹோ என வாழ்வார்.

அதேபோல் ஒரு காட்சிதான் தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் நடைபெறுகிறது. எம்.ஏ. பட்டதாரியான கபிலா என்பவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்காத சூழ்நிலை என்ன செய்வதென யோசித்தார். 

இவர் திடீரென தன்னை தன்னை வட பத்திரகாளியம்மன் என்று அறிவித்துக்கொண்டார். மேலும் சில வருடங்களுக்கு முன்னர் இறந்து போன தனது சகோதரி உடலில் இறங்கி அருள் வாக்கு கூறுவதாகவும் தெரிவித்தார். இதை நம்பிய பக்தர்கள் 1999 ஆம் ஆண்டு முதல் இவரிடம் அருள் வாக்கு பெற்று வருகின்றனர். சிறு குடிசையில் தொடங்கப்பட்ட இவரது அருள்வாக்கு மையம், தற்போது கார்பரேட் அளவுக்கு பிரம்மாண்டம் ஆகியுள்ளது,

இந்நிலையில் கோயிலில் அருள் வாக்கு கேட்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, நாகர் சிலைக்கு பூஜை செய்வதற்கு உண்மையான இரு நாகங்களை வரவழைத்து பூஜை செய்துள்ளார். பாம்புக்கு பாலாபிசேகம் செய்தும், நீச்சலடிக்க விட்டும், பக்தர்களிடம் காண்பித்து நன்கொடை வசூலிக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அருள்வாக்கு கூறும் நேரத்தில் கையில் சூலத்துடன் நிற்கும் கபிலா அம்மையாரின் கழுத்தில் பாம்பை சுற்றி வைக்கப்படுகிறது. அதாவது பரமசிவன் கழுத்தில் பாம்பு இருப்பதுபோல் அருள்வாக்கு சொல்லப்படுகிறது. மேலும் மருத்துவர்களால் தீர்க்க முடியாத நோய்களை எல்லாம் தான் தீர்த்து வைப்பதாக கூறுகிறார் கபிலா. பாம்பும், பாம்பாட்டியும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் வாடகை எனக் கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் இப்படிப்பட்டவர்களை நம்பி செல்லும் பொதுமக்கள் அவர்களை நித்தியானந்தா, ஆந்திரா கல்கி பகவான் ரேஞ்சுக்கு வந்தவுடன், அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. ஏமாற்று பேர்வழி என புலம்புகின்றனர்.