காஞ்சி காமாட்சியம்மன் கோவில் அர்சகர்களை துரத்தும் மரணம்!

புகழ்பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் கண்ணன் இறந்ததைத் தொடர்ந்து காஞ்சியில் ஒரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது.


அதற்கு காரணம் காமாட்சியம்மன் கோவிலில் பணியாற்றும் ஐந்து அர்ச்சகர்கள் அடுத்தது மரணமடைந்து இருக்கிறார்கள். இதற்கு காரணமாக கோவிலின் வடக்குவாசலைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.முன்பெல்லாம் அந்த வடக்கு வாசல் எப்போதும் மூடப்பட்டேதான் இருக்குமாம்.ஏதாவது மரணம் நிகழ்ந்தால் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படுமாம்.சமீபகாலமாக அந்த வடக்கு வாசல் நிரந்தரமாகத் திறந்து வைக்கப்படுகிறது என்றும்,

இது கோவிலின் ஆகம விதிகளுக்கு மாறானது,அதனால்த்தான் வடக்குவாசலை திறந்து வைத்ததில் இருந்து இப்படி அந்தக் கோவில் அர்ச்சகர்களை மரணம் துரத்துகிறது என்கிறது ஒரு தரப்பு.காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நிர்வாகம் சங்கரமடத்திடம் இருப்பதால்,அவர்களுக்குத் தெரியாத ஆகம விதிகளா என்று காமாட்சி பக்த்தர்களில் இன்னொரு சாரர் கேட்கிறார்கள்.

இதற்கு எதிர் மாறாக வடக்குவாசல் பகுதி கடைக்காரர்கள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து கதவைத் திறந்து வைத்து விட்டார்கள் என்றும் ஒரு செய்தி கசிகிறது.மொத்தத்தில் அத்திவரதரால் இந்தியாவெங்கும் பேசு பொருளான காஞ்சியில் இப்படி ஒரு புரளியைக் கிளப்பியது யார் என்று கோவில் நிர்வாகமோ , அரசோ கண்டுபிடித்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே காஞ்சிபுரம் மக்களுக்கும்,காமாட்சியம்மன் பக்தர்களுக்கும் ஒரே வேண்டுதலாக இருக்கிறது.