காஞ்சனா ரீமேக்! கெத்து காட்டி இந்தித் திரை உலகையே அதிரவைத்த லாரன்ஸ்!

காஞ்சனா திரைப்படத்தின் ரீமேக் விவகாரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடந்து கொண்ட விதம் இந்தித் திரை உலகையே அதிர வைத்துள்ளது.


ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் கடந்த 2011ம் ஆண்டு வெளியானது. பட்டி தொட்டி எங்கும் மாபெரும் ஹிட்டடித்த இந்த திரைப்படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கிறார்கள். தமிழில் லாரன்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி திரையுலகின் முன்னணி நாயகனான அக்ஷய் குமார் நடிக்கிறார். படத்தை லாரன்ஸ் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

காஞ்சனா ஹிந்தி ரீமேக்கிற்கு லக்ஷ்மி பாம் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் தனக்கு லக்ஷ்மி பாம் திரைப்படக் குழு உரிய மரியாதை தரவில்லை என்று கூறி அப்படத்தை இயக்கும் பொறுப்பை தட்டிக் கழித்தார் லாரன்ஸ். மேலும் தனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என்றும் அவர் அறிவித்தார்.

இந்தித் திரையுலகில் தற்போது சல்மான் கான், அமீர்கானுக்கு அடுத்தபடியாக மார்க்கெட் உள்ள நடிகர் என்று அக்ஷய்குமார் கருதப்படுகிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் அக்ஷய் குமாரை வைத்து திரைப்படம் இயக்க ஏராளமான இயக்குனர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்கையில் அவரது படத்தையே இயக்க முடியாது என்று கூறிச் சென்ற அந்த லாரன்ஸ் யார் என்கிற கேள்வி இந்தித் திரை உலகம் முழுவதும் பரவலாக எழுந்தது. மேலும் அக்ஷய் குமார் திரைப்படத்தையே இயக்க மாட்டேன் என்று கூறி விட்டு சென்றார் என்றால் லாரன்ஸ் மிகப் பெரிய ஆளாக தான் இருப்பார் என்றும் பேசப்பட்டது.

இதற்கிடையே இலட்சுமி பாம் திரைப்படத்தை இயக்க வேறு சரியான இயக்குனரையும் படக்குழு தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் லாரன்ஸ் செய்ய அனுப்பியுள்ளது படக்குழு. தன்னைச் சென்னையில் வந்து சந்திக்குமாறு லாரன்ஸ் கூற அதற்கு ஒப்புக்கொண்ட படத்தின் தயாரிப்பாளர் சென்னை வரவுள்ளதாகவும் இதில் உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் காஞ்சனா ரீமேக்கான லட்சுமிபாம் திரைப்படத்தை லாரன்ஸ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.