மக்கள் நீதி மய்யம் இந்தப் போரை நீதி மன்றத்தில் தொடங்குகிறது - கமல்ஹாசன்

சாத்தான்குளம் விவகாரத்தில் திடீர் திருப்புமுனையாக ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது மட்டும் போதாது என்று இன்னமும் பலர் போராடிவரும் நிலையில், கமல்ஹாசன் ஒரு ட்வீட் போட்டு சட்டப் போராட்டம் நடத்த இருப்பதைக் கூறியிருக்கிறார்.


அவர் ட்வீட்டில், ‘சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.’ என்று கூறியுள்ளார்.

இதனை மய்ய நிர்வாகிகள் ஆஹா, ஓஹோ என்று பாராட்டி வருகின்றனர். இது, அருமையான வழக்கு தலைவரே! இதுவரை யாரும் செய்யாத செய்வதற்கு துணிவில்லாத காரியத்தை செய்துள்ளீர்கள். பூணைக்கு யார் மணி கட்டுவது என்று அனைவரும் இருந்த வேளையில், காவலர்கள் மீதான மக்கள் புகார்களை விசாரிப்பது யார் என்பதை அறிய வழக்குத் தொடுத்தற்கு நன்றி தலைவா

CAA எதிரா முதல்முதலா கேஸ் போட்டதும் கமல் தான் டாஸ்மாக்கு எதிரா கேஸ் போட்டதும் கமல் தான் இப்ப, போலீஸுக்கு எதிரா கேஸ் போடறதும் கமல் தான். அரசியல்லயும் அவருக்கான தனிப்பாதையை ஆளும்கட்சிக்கெதிரா தைரியமா உருவாக்குறார் கமல் என்றெல்லாம் பாராட்டி தள்ளுகிறார்கள்.

கேஸ் போடப்போறேன்னு சொன்னதுக்கா இப்படி, முதல்ல போடுங்கப்பா.