3 இடங்களில் பிரச்சாரம் அடுத்தடுத்து ரத்து! கூட்டம் கூடாததால் கமல் டென்சன்!

கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார்


ஸ்ரீபெரும்புதூரில் கூட்டம் இல்லாததால் பிரசாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை புறப்பட்டுச் சென்றார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சனிக்கிழமை காலை பல்லாவரம், தாம்பரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.

பின்னர் படப்பை வந்தார். அங்கு கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஒரகடம் வந்தார். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். அங்கும் நிர்வாகிகள் சிலரே இருந்தனர். அங்கும் கூட்டம் இல்லாததால் பிரசாரம் செய்யாமலேயே சென்னை புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கமல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் அவரை பார்க்க கூட யாரும் வருவதில்லை. மேலும் கட்சிக்கு கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் இல்லாத காரணத்தினால் கமல் பிரச்சாரத்தில் கூட்டம் வருவதில்லை. இதனால் தொடர்ந்து பிரச்சாரம் செய்வதா என்கிற குழப்பத்தில் கமல் உள்ளார்.

இதே நிலை நீடித்தால் எந்த தொகுதியிலும் தனது வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்காது என்கிற பீதியில் கமல் இருப்பதாக சொலகிறார்கள். கூட்டத்தைகூட்ட வேண்டும் என்றால் பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்று கமலுக்கு சிலர் ஆலோசனை கூற அது நம்மிடம் எங்கு இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்கின்றனர்.