கோவையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் பிரமாண்ட பேரணி! கெத்து காட்ட தயாராகும் கல்கி சுப்ரமணியம்!

கோவையில் மாற்று பாலினத்தவர் மிகப்பெரும் விழா மற்றும் பேரணி நடத்த உள்ளனர்.


திருநங்கை கல்கி சுப்ரமணியம், சகோதரி ஃபவுண்டேஷன் என்ற பெயரில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக, மாற்று பாலினத்தவருக்கான பல்வேறு சட்ட போராட்டங்களை மேற்கொண்டுள்ள இந்த நிறுவனம், தற்போது கோவையில் ஒரு மாத காலத்திற்கு, மாற்று பாலினத்தவர் பங்கேற்கும் விழா ஒன்றை நடத்த உள்ளது.

இதையொட்டி, அக்டோபர் 13ம் தேதி மிகப்பெரும் பேரணி ஒன்றையும் நடத்த சகோதரி ஃபவுண்டேஷன் திட்டமிட்டுள்ளது. ரெயின்போ எனப்படும் வானவில் நிறங்கள் உள்ளடக்கியதாக, இந்த பேரணி இருக்கும் என்றும், இது மாற்று பாலினத்தவர் மீது மக்களுக்கு இயல்பான அபிப்ராயம் வர முக்கிய வழிவகுக்கும் எனவும், கல்கி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் Coimbatore Rainbow Pride Festival நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.