ஒரே நேரத்தில் 3 பேர்! பின்னி பெடல் எடுக்கும் ஜோதிகா!

சென்னை: ஜோதிகாவுக்கு, அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சக நடிகரான சூர்யாவை திருமணம் செய்தபின், நடிப்பில் இருந்து விலகினார். குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த அவர், 36 வயதினிலே என்ற படத்தின் மூலமாகமீண்டும் சினிமா வாழ்க்கைக்கு திரும்பினார்.

 

அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து புதிய படங்களில் அவர் நடிக்க தொடங்கியுள்ளார்இதன்படி, தற்போது எஸ்.ராஜ் இயக்கத்தில், சமூக அக்கறை கொண்ட கதை ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததது.

 

இந்நிலையில், அடுத்ததாக, ஜே.ஜே.பிரெட்ரிக் என்ற புதுமுக இயக்குனர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர், வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமதுவின் உதவியாளர் ஆவார்.

 

இந்த படத்தை, ஜோதிகாவின் கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளதுஇதுதவிர, ஜோதிகா மூன்றாவதாக ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை, பாரதிராஜா, பாக்யராஜ் மற்றும் ஆர்.பார்த்திபன் ஆகியோர் சேர்ந்து இயக்க உள்ளனர்.

 

நீண்ட இடைவெளிக்குப் பின், இவர்கள் 3 பேரும் இணைந்து பணிபுரிய உள்ள இப்படத்தின் கதை மிக முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய படத்திற்கான ஷூட்டிங், மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

அதேசமயம், திருமணம் முடிந்தபிறகும், ஜோதிகாவுக்கு சினிமாத்துறையில் வரவேற்பு உள்ளதை, பலரும் வியப்புடன் பார்க்கின்றனர்.