திருமாவளவனே, எங்களை மன்னிக்கனும்! கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உருக்கம்! ஏன் தெரியுமா?

திருமாவுக்கு லண்டன் மாநகரில் மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


பணம் பறிப்பதற்காக நாடுகளை நோக்கி வருவதாக திருமா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த நிலையில் லண்டனில் நடந்த நிகழ்வுக்காக, புலம் பெயர்ந்த தமிழர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டிருக்கிறார், பிரபல நடிகரும் கவிஞருமான ஜெயபாலன்.

இதோ அவரது அறிக்கை - லண்டன் விம்பம் அமைப்பு 24 ஆகஸ்ட் 2019 அன்று ஈழத்தமிழரின் நீண்டகால நண்பரான தோழர் தொல் திருமாவளவனுக்கு வரவேற்ப்பும் கலந்துறையாடலும் ஏற்பாடு செய்திருந்தது. மேற்படி கலந்துரையாடலில் இரு ஈழத் தமிழ் காடையர்கள்/ஈழத்து சாதி வெறியர்கள், தோழர் திருமாவளவனை அவமானப்படுத்த முயன்றமை அதிற்ச்சி தருகிறது,

என்போலவே பல ஈழ தமிழர்களும் லண்டன் சம்பவத்தால் அதிற்ச்சி அடைந்துள்ளனர். தோழர் பவுசரும் ஏனைய விம்பம் நிர்வாகத்தினரும் நிலமையை கட்டுப்படுத்தி அரசியல் காடையரை வெளியேற்றி நிகழ்ச்சியை சிறப்பான வகையில் நடத்தி முடித்துள்ளனர். அதிற்ச்சி அடைந்துள்ள சக ஈழத் தமிழ் கலைஞர்களின் கோரிக்கையை ஏற்று,

அதன் அடிப்படையில் ஈழத் தமிழரின் முன்னணி ஆதரவுக்குரலான விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலமை தோழர் திருமாவளவனிடமும் ரவிக்குமார் வன்னியரசு போன்ற அமைப்பு தோழர்களிடமும் லண்டன் சம்பவத்துக்காக ஈழத் தமிழர் சார்பாக மன்னிப்புக் கோருகிறேன். மன்னியுங்கள் மறந்து விடுங்கள் தோழர்களே என்று கூறியிருக்கிறார் ஜெயபாலன்.