ஈசா மையத்தில் மோடிக்கு ஆதரவாக பிரசாரம்..! சர்ச், மசூதிகளுக்குப் ஜக்கி பதிலடி!

இப்போது தமிழகத்தில் உள்ள அத்தனை சர்ச்களிலும், ஜமாத்களிலும் நேரடியாகவே மோடியை எதிர்த்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.


மீண்டும் ஒரு முறை மோடியின் கையில் இந்திய நாடு சென்றுவிட்டால், சிறுபன்மையினரை முற்றிலும் நசுக்கிவிடுவார். அதனால், எந்தக் காரணம் கொண்டும் மோடிக்கு ஓட்டுப் போடவேண்டாம் என்று வெளிப்படையாகவே அறிவித்து வருகிறார்கள்.

இவர்களுக்குப் பதிலடி கொடுப்பதுபோன்று, இப்போது கோவை வெள்ளிங்கிரி மலையில் உள்ள ஜக்கி வாசுதேவின் ஈசா மையத்தில் பா.ஜ.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறதாம். அவரால் மட்டும்தான் இந்துக்களுக்கு நன்மை கிடைக்கும், நமது நாடு இந்து நாடு என்ற பெயர் பெற்று, இந்து மதத்துக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்றால், மோடிக்கு மட்டுமே வாக்குப் போடுங்கள் என்று சொல்லப்பட்டு வருகிறதாம்.

கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதுமுள்ள ஈசா கிளைகளில் , குட்டிக்குட்டி ஈசா சாமியார்கல் இந்த பிரசாரத்தை தீவிரமாக எடுத்துச்செல்கிறார்களாம். ஏன் இப்படி இறங்கிவிட்ட்டார் என்று கேட்டால், சாமிதான்  கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ரொம்பவும் மெனக்கெட்டார். தான் அமைத்துக்கொடுத்த கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார் என்கிறார்கள். மேலும் அவர்களே, சர்ச், மசூதிகளில் பிரசாரம் நடக்கும்போது நாம் செய்வதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினர்கள்.

இதுதவிர ஜக்கி வாசுதேவின் ஆன்மிகச் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 2017-ல் மத்திய அரசு நாட்டின் உயர்ந்த விருதான `பத்ம விபூஷண்` வழங்கி கவுரவம் செய்தது. அதற்கு செய்யும் கைமாறாகக்கூட பார்க்கலாம் என்கிறார்கள்.. ஏற்கெனவே யானை வழித்தடம், காடு அழிப்பு போன்ற குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, தேர்தல் பிரசார சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஜக்கி. ஆனால், இதனை இந்துக்கள் ஆதரவாக பார்த்துவருகிறார்கள் என்பதுதான் ஹைலைட்.