கஞ்சா வழக்கில் ஓனருக்கு சிறை! பஞ்சாப் அணிக்கு விரைவில் தடை!

உரிமையாளர் நெஸ் வாடியா கஞ்சா வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளதால் கிங்ஸ் லெவன் பஞ்சாய் அணிக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.


போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனைக்குள்ளான நெஸ் வாடியா மீதும், அவர் அங்கம் வகிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மீதும் மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜப்பான் சென்ற நெஸ் வாடியா, 25 கிராம் கஞ்சா கொண்டு சென்றதால் போலீசில் சிக்கினார். 

அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஜப்பான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்நாட்டுச் சட்டப்படி இந்த வழக்கில் நெஸ் வாடியா உடனடியாக சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இல்லை.

இருந்தாலும் நெஸ் வாடியா மீதும், அவர் இணை உரிமையாளராக உள்ள கிங்ஸ் லெவன் அணி மீதும் பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. சூதாட்டப் புகாரில் சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள பிசிசிஐ, அதை விட இது பெரிய குற்றம் என்று கருவதாக கூறப்படுகிறது.