பட வாய்ப்புக்காக இயக்குனர் வீட்டுக்கு இரவில் சென்ற ஸ்ரீதேவி மகள்! வைரல் போட்டோ!

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது பாலிவுட் சினிமாவில் பிரபலமாகி கொண்டிருக்கிறார். இவர் வளர்ந்து வரும் இளம் நடிகை ஆவார்.


இவர் "குஞ்சான சக்சேனா பயோபிக்" என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக உத்ரபிரதேசத்திற்கு சென்றிருந்தார்.  இந்த திரை படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஜான்வி சமீபத்தில் ஊருக்கு திரும்பியுள்ளார்.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான வேலைகளில் முழு மூச்சாக இறங்கியுள்ளார். அதற்காக முதற்கட்டமாக பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாரியை, நேற்று இரவு அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்து உள்ளார். இதன்மூலம் ஜான்வி கபூர்,  அடுத்ததாக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாரியின்  திரைப்படத்தில் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

நேற்றைய தினம் இயக்குனரை, அவரது அலுவலகத்தில் சென்று பல மணிநேரம் சந்தித்து பேசியுள்ளார்.  இதன் பின் தன்னுடைய காரில் ஏறி சென்றார். அப்போது தான் அவருடைய ரசிகர்கள் கண்களில் சிக்கியுள்ளார். 

பொதுவாக நடிகர் நடிகைகள் இந்த மாதிரியான சூழ்நிலைகளில் தங்களது முகங்களை காட்டாமல் குனிந்து கொள்வர்.  ஆனால் ஜான்வியோ, அழகான சிரித்த முகத்துடன் தன்னுடைய ரசிகர்களுக்கு காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் ஒரு பட வாய்ப்பிற்காக நள்ளிரவில் இயக்குனரின் அலுவலகத்திற்கு சென்றது ஏன்? என இவரது ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.