துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு! பீதியில் எஸ்ஆர்எம் பாரிவேந்தர்!

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ள நிலையில் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள எஸ்ஆர்எம் பாரிவேந்தர் பீதியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். திமுக கூட்டணியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற இந்த சோதனை அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனை திமுக பொருளாளர் துரைமுருகன் ஓடு நின்று விடாது என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் தொழிலதிபர்களாகவும் பணபலம் கொண்டவர்களாகவும் இருக்கக்கூடிய அவர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் அடுத்தடுத்து சோதனைகள் மேற் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே கட்சியின் பாரிவேந்தர் வருமான வரித்துறையின் அடுத்த குறி யாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காரணம் பாரிவேந்தர் தன்னுடைய தொகுதிகளுக்கான செலவு மட்டும் அல்லாமல் திமுக வேட்பாளர்கள் ஒரு சிலரின் செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இதனால் பாரிவேந்தரை வருமானவரித்துறை சோதனைக்குள் இழுத்தால் அடுத்தடுத்து மேலும் பலர் சிக்குவார்கள் என்று கூறுகிறார்கள். இதனால்தான் பாரிவேந்தர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னுடைய தொலைக்காட்சி மூலமாக வருமான வரித்துறை சோதனை க்கு எதிராக அடுத்தடுத்து செய்திகளும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பிக் கொண்டு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.