கொரோனா பீதி..! ஆதியோகி தரிசனத்துக்கும் தடை..! ஈஷா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகம் இன்று (மார்ச் 20) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள மகாத்மா பசுமை இந்தியா திட்டத்தின் நாற்றுப்பண்ணைகளும் (ஈஷா நர்சரிகளும்) மார்ச் 31-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும்.

இதற்கு முன்னதாக, உலகம் முழுவதும் நடைபெற இருந்த ஈஷா யோகா வகுப்புகள் அனைத்தும் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மும்பையில் நடத்தவிருந்த ‘இன்னர் இன்ஜினியரிங்’ யோகா வகுப்பும், தென் ஆப்பிரிக்க பயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.