வண்ணாரப்பேட்டை கலவரம் முடிவுக்கு வருகிறதா..? மிரட்டல் கடிதம் யார் அனுப்பியது?

சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து நடந்துவரும் இஸ்லாமியர்களின் போராட்டம் எப்போது முடிவுக்கு வரும் என்பது புரியாத நிலையில் உள்ளது. ஏதாவது ஒரு காரணம் சொல்லி, அந்தப் போராட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று அரசு நினைக்கிறது.


இந்த நிலையில்தான், வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு, அல்-ஹக் என்ற இயக்கத்தின் பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. அதில் தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏக்களையும் கடத்தப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் அந்தக் கடிதத்தில், ‘தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த கூடாது’ என்றும் ‘அல் ஹக் என்ற பெயரில் தாங்கள் 250 பேர் ஒரு இயக்கமாக செயல்பட்டு வருகிறோம்’ என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

போராட்டம் அமைதியாக நடைபெறும் நேரத்தில் இப்படியொரு கடிதம் அனுப்பியது யார் என்று போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. போராட்டத்தை உடைப்பதற்கான முயற்சியாக இருக்கக்கூடாது என்பதுதான் வண்ணாரப் பேட்டை இஸ்லாமியர்களின் எண்ணம்.