குழந்தைக்குப் பிறக்கும்போதே பல், நகம் இருக்க வாய்ப்பு உண்டா?

ஒருசில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே ஒருசில பற்களும், நகங்கள் நன்றாக வளர்ந்தும் காணப்படுவதுண்டு. இதுபோன்ற சூழலில் அவற்றை எப்படி பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.


குழந்தையின் கைகளில் நகங்கள் வளர்ந்திருந்தால் தன்னைத்தானே சொறிந்துகொள்ளும்போது காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.அதனால் குழந்தைக்கு வலிக்காதவாறும் நகக்கண்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் நகங்களை அகற்ற வேண்டும்.

குழந்தைகளுக்கு நகங்கள் வேகவேகமாக வளரும் என்பதால் வாரம் இரண்டு முறையேனும் இதனை வெட்டிவிட வேண்டும்.பெரும்பாலான குழந்தைகளுக்கு பற்கள் இருப்பதில்லை, அரிதாகவே ஒருசில பற்களுடன் குழந்தைகள் பிறப்பதுண்டு.

தாய் பல் விளக்கும்போது மென்மையாக குழந்தையின் பற்களை சுத்தப்படுத்துவதே போதுமானது. குழந்தைகளுக்கு பற்பசை கொண்டு பல் தேய்பது அவசியம் கிடையாது.