அடேங்கப்பா தமிழருவிமணியன், இப்படி ஒரு கொள்கைக்காரரா..? ரஜினிக்கு செம ஜாலிதான்

நான் என்னுடைய கொள்கையில் எப்போதும் உறுதியாக நிற்பவன் என்று பார்க்கும் அத்தனை பேரிடமும் அழுத்தம்திருத்தமாகச் சொல்பவர் தமிழருவிமணியன்.


ரஜினியை நான் அரசியலுக்குக் கொண்டுவந்து நல்லாட்சி தரச் செய்வேன் என்றும் சொல்லி வருகிறார். இந்த நிலையில் அவர் கொள்கையில் இரும்பு போன்று உறுதியானவர் என்பதற்கான முழு ஆதாரமும் வெளிவந்திருக்கிறது. ஆம், அவர் இதுவரை எத்தனை கட்சிகளில் இருந்து மாறி வந்திருக்கிறார் என்பதுதான் அந்தத் தகவல்.

காங்கிரஸில் இருந்திருக்கிறார். ஸ்தாபன காங்கிரஸில் இருந்திருக்கிறார். ஜனதா கட்சியில் இருந்திருக்கிறார். ஜனதா தளத்தில் இருந்திருக்கிறார். அகில இந்திய லோக் சக்தியில் இருந்திருக்கிறார். தமிழ்நாடு லோக் சக்தியில் இருந்திருக்கிறார். தமிழ் மாநில காங்கிரஸில் இருந்திருக்கிறார். மீண்டும் காங்கிரஸில் இணைந்திருக்கிறார்.

காந்திய மக்கள் இயக்கத்தில் இருக்கிறார். ஜெயலலிதாவை ஆதரித்திருக்கிறார். கருணாநிதியை ஆதரித்திருக்கிறார். வைகோவை  தரித்திருக்கிறார். மோடியை ஆதரித்திருக்கிறார். விஜயகாந்தை ஆதரித்திருக்கிறார். ரஜினிகாந்தை ஆதரித்து வருகிறார்.

இத்தனை கட்சிகளுக்குப் போயும் தன்னுடைய கொள்கையில் தமிழருவிமணியன் உறுதியாக இருக்கிறார் என்பதால், இப்போது அவருடன் சேர்ந்திருக்கும் ரஜினிக்கு ரொம்பவும் நல்ல யோகம்தான். ஆமாம், தமிழருவிமணியனின் கொள்கைதான் என்ன..? வீரமணி மாதிரி பழைய சோறு சாப்பிடுவதா..?