தினகரனை மிரட்டினாரா சசிகலா? மீண்டும் புகழேந்தி விஷயத்தில் கப்சிப்!

சசிகலாவை சந்தித்து வந்ததும் புகழேந்தி விவகாரத்தில் நல்ல முடிவு எடுத்துவிடுவார் என்று தினகரன் ஆட்கள் சந்தோஷத்தில் குதித்தார்கள். ஆனால், இன்றும் கப்சிப் என்று வந்துவிட்டார் தினகரன்.


ஆம், இன்று சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன். அப்போது, சீனப் பிரதமர் வருகையை அனைவரும் வரவேற்கிறோம் காரணம் பாகிஸ்தான் பிரச்சனையில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது இரண்டு நாடுகளுக்குள் உள்ள பிரச்சனையை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் மூன்றாவது நபர் தலையிடக்கூடாது என சீனா அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சீன அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது என பேசப்பட்ட நிலையில் தற்போது சீனாவின் இந்த கருத்து மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது என்றார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கட்சி பதிவு சம்பந்தமாக வரும் 17ம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

இந்த விசாரணையில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொள்வார்கள் விரைவிலேயே கட்சி பதிவு செய்யப்படும் அதன்பின் தனி சின்னம் பெற்று உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என்றார்.

புகழேந்தி குறித்த கேள்விக்கு தேவையற்ற விஷயங்களை பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தேவையான விஷயங்கள் பற்றி பேசுவோம் என தெரிவித்தார்.

மீடியாக்களுக்கு இதுதானே சார் தேவையான விஷயம்.