பன்னீரின் மகன் அமைச்சர் ஆகிறாரா..? ஜக்கி வாசுதேவ் ஆசி கிடைச்சாச்சு..!

இன்று அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர் ஈஷா ஜக்கி வாசுதேவ் என்றால் மிகையில்லை. அவரைத் தேடி பாரதப்பிரதமர் மோடியில் இருந்து ஜனாதிபதி வரை அத்தனை பேரும் கோவைக்கு வருகிறார்கள்.


அது தெரிந்தோ என்னவோ, சிவராத்திரி விழாவில் கலந்துகொண்ட ரவீந்திரநாத் ஜக்கி வாசுதேவ் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி, அந்தப் படத்தை வைரலாக்கவும் செய்திருக்கிறார்.

இத்தனை பணிவும், மரியாதையும் அவரது அப்பா பன்னீர்செல்வத்துக்கு மட்டுமே உரித்தானது. மிஸ்டர் பணி என்று பெயர் வாங்கியவர் பன்னீர். இப்போது அப்பாவையும் மிஞ்சிவிட்டார் ரவீந்திரநாத்.

தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்னும் தலைக்கனமின்றி பெரிய மனுசங்க காலிலெல்லாம் தொசுக் தொசுக்கென்று விழும் ரவீந்தரநாத் போன்ற ஒரு மகான் மத்திய அமைச்சராக மாறினால், தமிழகத்துக்குப் பெருமையாக இருக்கும்தான்.