நிர்மலாவுடன் சந்திப்பு நலம்தானா..? திருமாவை விளாசும் பா.ஜ.க.வினர்!

பா.ஜ.க.வினர் மீது கடுமையாக விமர்சனம் வைத்துவந்த திருமாவளவன், மிகவும் சிரமப்பட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம். கோரிக்கைன்னா குடுத்துட்டுப் போங்க என்று முதலில் கடுமை காட்டப்பட்டதாம். நேரில் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாலே அனுமதி கிடைத்ததாம்.


பா.ஜ.க.வினர் மீது கடுமையாக விமர்சனம் வைத்துவந்த திருமாவளவன், மிகவும் சிரமப்பட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தாராம். கோரிக்கைன்னா குடுத்துட்டுப் போங்க என்று முதலில் கடுமை காட்டப்பட்டதாம். நேரில் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாலே அனுமதி கிடைத்ததாம். 

கிட்டத்தட்ட பட்ஜெட் விவகாரம் முழுமையாக முடிவடைந்துவிட்டதால், திருமா கொடுத்திருக்கும் கோரிக்கையை நிர்மலா கண்டுகொள்ளவே மாட்டார். சும்மா ஆசைக்காக போஸ் கொடுக்கிறார்கள் என்று கிண்டல் அடிக்கிறார்கள் பா.ஜ.க.வினர். 
அதுசரி, அப்படி என்னதான் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம் என்று கேட்டோம். 

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதை சரி செய்ய ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியங்கள் தருவது உள்ளிட்ட பெரிய அளவிலான திட்டத்தை இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். விவசாயிகள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். விவசாய தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும்.

வருமான வரி உச்ச வரம்பு 10 லட்சத்திற்கு உயர்த்தப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் மிகப்பெரிய திட்டத்தை இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும். இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பிளாக்கிலும் தலித் சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை தொடங்க வேண்டும்.  கல்வி உதவித்தொகை கிடைக்காமல் பல மாணவர்கள் தங்களது கல்வியை பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார்கள். எனவே போஸ்ட் மெட்ரிக் கல்வித்தொகை திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாடு, தண்ணீர் பற்றாகுறை கொண்ட ஒரு மாநிலம். மேல் நீர் மற்றும் நிலத்தடி நீரின் வளங்கள் போதிய அளவில் இல்லாத மாநிலம். அதற்கான உடனடி தீர்வு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள். விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தூத்துகுடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்த திட்டத்தை அமல்படுத்த போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும். ந்த தேசத்தின் நிலமற்ற விவசாயித் தொழிலாளர்களின் நலன் கருதிஅடிப்படை வருமான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும் என்று 19 கோரிக்கைகள் கொடுத்திருக்கிறார்களாம். ஏதாவது ஒன்று நிறைவேறினால் அண்ணன் திருமாவினால் நிறைவேறியதாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.