காங்கிரஸை உடைக்கிறாரா மோடி? முதல் விக்கெட் ஜெய்ராம் ரமேஷ்!

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் ஜெய்ராம் ரமேஷ். அவருக்கு பா.ஜ.க. பிராக்கெட் போட்டு இழுத்துவிட்டது என்பதுதான் இப்போது டெல்லி டாக்.


காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்பது எல்லோரும் அறிந்த சமாச்சாரம். ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கும் முன்பு 370 சட்டப்பிரிவை நீக்கும் எண்ணம் இருந்தது. அதனால், யாரும் அழுத்தி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஒருசிலர் பாராட்டவும் செய்தார்கள்.

இப்போது அந்த விவகாரத்தில் அடுத்தகட்டம் நடந்துள்ளது. ஆம், பிரதமர் மோடியை மற்ற விவகாரங்களுக்காகவும் நேரடியாக பாராட்டும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில்,  சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெய்ராம் ரமேஷ்,

'மோடி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்; கிராமத்து பெண்களுக்கு, சமையல் எரிவாயு அளிக்கும் திட்டம் , விவசாயிகளுக்கு நிதியுதவி போன்ற திட்டங்கள் கொண்டுவந்திருப்பவரை தேவையில்லாமல் விமர்சனம் செய்யக்கூடாது” என்று பேசிவிட்டார்

இந்தப் பேச்சுதான்  காங்கிரஸ் தலைவர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது. காங்கிரஸில் இருந்து மோடியை பாராட்டுவது தவறு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

ஜெய்ராம் ரமேஷ் இதற்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இவர்களிடம் மன்னிப்பு கேட்பதைவிட, பா.ஜ.க.வில் சேர்ந்துவிடுங்கள், பதவி கிடைக்கும் என்று ஆசை காட்டப்படுகிறதாம்.

மோடியின் இழுப்புக்கு ஜெய்ராம் ரமேஷ் விழுந்துவிடுவாரா என்பது இந்த வாரத்திலேயே தெரிந்துவிடும் என்கிறார்கள்.

பார்க்கலாம்.