கோவையை பிரான்ஸ் நாட்டுக்கு விற்பனை செய்கிறதா அரசு! அலறும் மக்கள்!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் 3,500 கோடி ரூபாய்க்கு கோவை மாநகராட்சி போட்டுள்ள தண்ணீர் ஒப்பந்தம் கடுமையான சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்களுக்கு தண்ணீர் தர வேண்டியது அரசின் பொறுப்பு, இதை எப்படி தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதுகுறித்து  தனியார் தொண்டு நிறுவனங்கள் எழுப்பும் கேள்விகள் அதிர்ச்சி கொடுக்கிறது. மதுவை நீங்கள் கொடுப்பீர்கள், தண்ணீரை தனியார் தர வேண்டுமா? தண்ணீர் பற்றாக்குறை உருவாக்கி, எதிர்காலத்தில் தண்ணீர் விநியோகம் மூலம் கொள்ளை அடிக்கும் திட்டத்தை அரசு கொண்டு வருவது நியாயமற்றது. உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் முதல்வரும் கோவையில் 60 வார்டுகளில் நடைமுறை படுத்தபட்டு வரும் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும்.

தண்ணீர் போர் தற்போது மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், சூயஸ் நிறுவனம் சென்ற இடமெல்லாம் கொடூரமாக நடந்துக்கொண்டிருந்த வரலாறுகள் உள்ளது என தெரிவித்தார். குடிநீர் விநியோகம் செய்யும் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யாவிட்டால் பொதுமக்களுடன் இணைந்து  

போராட்டங்கள் நடத்தப்படும் என சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை விட, இது மோசமான திட்டம் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், உக்கடம் உட்பட 12 குளங்களில் மீன் பிடிக்க அனுமதி இல்லாதபோது, நாளொன்றுக்கு 4 முதல் 10 லட்சம் வரை மீன்கள் பிடித்து வியாபாரம் செய்யப்பட்டு வருவதாகவும் ஆளுங்கட்சி ஒத்துழைப்புடன் இந்த வருமானம் சட்டமன்ற உறுப்பினர் முதல் அமைச்சர் அவர் செல்வதாகவும் கேரளா, ஆந்திராவிலிருந்து மீனவர்கள் வரவழைக்கப்பட்டு மீன் பிடிக்கப்பட்டு வருகிறது என தகவல் கிடைத்து உள்ளது. இதனை தொடர்ந்தால் வழக்கு தொடரப்படும் என அப்போது தெரிவித்துள்ளனர்.