ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வில் சேரப்போகிறார் சத்யராஜின் மகள் திவ்யா!

ஊட்டச்சத்து நிபுணராகத் திகழும் திவ்யா சத்யராஜ், நீண்ட காலமாகவே அரசியலில் இறங்கும் ஆசையில் இருக்கிறார்.


அதற்காக அவர் விரைவில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய இருப்பதாகத் தெரியவந்துள்ளது. " அரசியல்வாதிகள் எண்ணம் எல்லாம் ‌பேனர் கட்டுவதிலும், போஸ்டர் ஒட்டுவதிலும்தான் இருக்கிறது. மக்கள் தேவைகளை புரிந்து கொள்வதில்லை.

நாம் ஒரு அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றால், அந்த அமைப்பில் இருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும். மக்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்கான வேலையில் ஈடுபட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆகவே, நான் அரசியலுக்கு வருவதன் மூலம் சமூக நலத்திட்டங்கள் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று சொல்லி இருக்கிறார் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ்.

2021 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிற்பதற்கு வாய்ப்பு கொடுத்தால், கட்சியில் சேர்வதற்கு சத்யராஜ் உறுதி கொடுத்திருக்கிறாராம். நாட்டுக்கு சத்யராஜ் எத்தனை சேவை செய்திருக்கிறார் என்பது தி.மு.க.வுக்கு நன்றாகவே தெரியும். அதனால், அவரது மகள் கட்சியில் சேர்வதாகச் சொன்னால் விடுவார்களா என்ன..?