கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி அரசியலில் நுழைய போகிறாரா? பா.ஜ.க.வில் இருந்து அழைப்பு!

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனியின் கிரிக்கெட் விளையாட்டு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. இனி, அவரை ஐபிஎல் மேட்களில் மட்டுமே பார்க்க முடியும்.


ஏற்கனவே தோனிக்கும் பா.ஜ.க.வுக்கும் ரொம்பவே நெருக்கம் உண்டு. அதனடிப்படையில்தான் அவருக்கு ராணுவப் பதவி வழங்கப்பட்டது. அவரும் கார்கில் பகுதிகளுக்கு எல்லாம் சென்றுவந்தார்.

இப்போது அவர் விளையாட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், அவர் அடுத்து பா.ஜ.க.வில் சேர்ந்து அரசியல் பணியில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி

சுவாமி வெளீயிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எம்.எஸ்.தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், ஆனால் வேறு எதில் இருந்தும் அல்ல. அவரது திறமையால் முரண்பாடுகளுக்கு எதிராக போராட முடியும். கிரிக்கெட்டில் அவர் நிரூபித்த ஓர் அணியின் எழுச்சியூட்டும் தலைமை பொது வாழ்க்கையிலும் தேவை. அவர் 2024ஆம் நடைபெறவுள்ள மக்களவைத் பொதுத் தேர்தலில் போராட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக, அழைப்பு வந்தாச்சு. இனி, அரசியலில் சில ஹெலிகாப்டர் ஷாட்களை எதிர்பார்க்கலாம்.