கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

சின்ன வயதில் இருந்து பல பெண்கள் வாரத்தில் ஒரு நாளாவது விரதம் இருப்பார்கள். அதனை கர்ப்ப காலத்திலும் தொடரலாமா என்று ஆலோசனை கேட்பார்கள். எந்தக் காரணம் கொண்டும் கர்ப்பிணிகள் பட்டினியாக இருப்பது ஏற்கக்கூடியது அல்ல என்று மருத்துவ ஆய்வாளர்கள் உறுதிபட தெரிவித்து உள்ளார்கள்.


* தாய் பட்டினியாக இருப்பது கர்ப்பத்தில் உள்ள கருவிற்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. அதனால் குழந்தை பிறப்புக்குப் பிறகு விரதத்தைத் தள்ளிப்போட வேண்டும்.

* ஆப்பிள் அல்லது மாம்பழம் ஒரு பக்கம் அழுகி இருந்தால், நல்ல பக்கத்தை மட்டும் சாப்பிடுவதும் கர்ப்பிணிகள் உடலுக்குப் பாதிப்பை உண்டாக்கும்.

* மிகவும் சூடான உணவு அல்லது குளிர்ச்சியான பானங்களை உட்கொள்வதும் சரியல்ல.

கர்ப்பிணிகள் மல்லாக்கப் படுப்பதும் ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் குழந்தையின் எடை கர்ப்பிணியின் ரத்தக் குழாய்களை அழுத்துவதால், மூச்சு விடுவாதில் சிக்கல் ஏற்படலாம். எனவே ஒருக்களித்துப் படுப்பதே நல்லது.