என்னது மோடியை பேட்டி எடுத்த நடிகர் இந்தியனே இல்லையா? பரபரக்கும் தேசிய அரசியல்!

பிரதமர் மோடியை பிரத்யேகமாக பேட்டி எடுத்த ஒரே இந்தியன் என்று நடிகர் அக்சய் குமாருக்கு பாராட்டுகள் குவிந்தன. ஆனால் அக்சய் இந்திய குடிமகனே இல்லையாம். கனடா குடியுரிமை பெற்று இந்தியாவில் நடித்து சம்பாதிப்பவர் என்பது இப்போது நிரூபணம் ஆகியிருக்கிறது..


ஏனென்றால் ஏப்ரல் 29 ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலில் எல்லா நட்சத்திரங்களும் ஓட்டு போட்டு விரல் மை காட்டினார்கள். உங்களை எந்த பூத்திலும் பார்க்கவில்லையே? என்று ஒரு மும்பை நிருபர் அக்சயிடம் கேட்க, அவரை நைசாக தோளில் கைபோட்டு அழைத்துச்சென்று நழுவியே விட்டார். 

இந்த நிலையில்,  இந்திய குடிமகன் எவரும், இன்னொரு நாட்டின் குடிமகனாக இருக்க சட்டம் அனுமதிக்கவில்லை. வேறு நாட்டின் பிரஜையாக விரும்பினால், இந்திய பிரஜை என்ற தகுதியை, உரிமையை முதலில் கைவிட வேண்டும். பாஸ்போர்ட்டை சரண்டர் செய்ய வேண்டும்.  அக்சய் அப்படித்தான் கனடா குடிமகன் ஆனார் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. கனடா பத்திரிகையே அதை செய்தியாக வெளியிட்டுள்ளது.

விவகாரம் பெரிதானதும் அக்சய் இப்போது அறிக்கை விட்டிருக்கிறார்:

நான், கனடா குடிமகன் என்பதையோ, கனடா பாஸ்போர்ட் வைத்திருப்பதையோ நான் மறைத்தது இல்லை. ... ஆனால், நான் எந்த நாட்டு குடிமகன் என்பது மற்றவர்களுக்கு தேவையில்லாத விஷயம் என்று சொல்லியிருக்கிறார்.. இத்தனை நாளும் இந்தியாவுக்கு விசுவாசி மாதிரி சினிமாவில் நடிச்சதும், நம்ம பிரதமரையே பேட்டி எடுத்ததும் நடிப்புதானா கோபால்..?