செங்கோட்டையன் குடித்துவிட்டு அறிவிப்பு வெளியிடுகிறாரா...? சிரிப்பாய் சிரிக்கும் மக்கள்

பள்ளிகளில் ஏப்ரலுக்கு முன் மாணவர் சேர்க்கை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று அமைச்சர் செங்கோட்டையன் திடீரென அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.


அதாவது ஏப்ரலுக்கு முன்பே சேர்க்கை நடத்தி வசூல் செய்வதை தடுப்பதற்கு இப்படி அறிவிப்பு செய்திருக்கிறாராம். அவரது இன்றைய அறிவிப்பில், ‘கல்வியாண்டு தொடங்கும் முன்பே, அதாவது ஏப்ரல் மாதத்துக்கு முன்பே மாணவர் சேர்க்கையை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் டியூசன் மையங்களும் தற்போது அரசின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. டியூசன் மையங்களும் முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்பட வேண்டும்’ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சராக இருந்தாலும், செங்கோட்டையனுக்கு சென்னையில் பள்ளிகளில் எப்படி அட்மிஷன் நடைபெறுகிறது என்பதே தெரியவில்லை என்று மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். ஏனென்றால், சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் எல்லாமே ஜனவரி மாதமே அட்மிஷன் முடிந்துவிடுகிறது.

இதற்கான அறிவிப்பை டிசம்பர் முதல் வாரமே வெளியிட்டு, டிசம்பர் மாதம் முதலே மாணவர் சேர்க்கைத் தொடங்கி ஜனவரி மாதத்திற்குள் முடித்துவிடுகிறார்கள். இந்த லட்சணத்தில் பிப்ரவரி மாதம் அறிவிப்பு கொடுத்து எச்சரிக்கை செய்கிறாராம்.

குடித்துவிட்டு அறிவிப்பு வெளியிடுகிறாரா என்று மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள். கோட்டையிலே இருக்காமல் ரோட்டில் போய் விசாரியுங்கள் செங்க்ஸ்...