உதயநிதியை வெளியே விடாதீங்க.. தேர்தலில் தி.மு.க. தோற்றுப்போகும். எச்சரிக்கும் ஐபேக்

கடந்த 10 நாட்களாக முரசொலி பார்த்துவரும் தி.மு.க. நிர்வாகிகள் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போயிருக்கிறார்கள். ஏனென்றால், அதுவரை ஒவ்வொரு பக்கத்திலும் உதயநிதி புகைப்படத்துக்கும் செய்திக்கும் மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.


இப்போது உதயநிதி பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டன. அதேபோன்று கட்சி விவகாரங்களிலும் தேர்தல் வரையிலும் வெளிப்படையாகத் தலையிட வேண்டாம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.

என்னவென்று விசாரித்தால், தி.மு.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் கொடுத்த ரிப்போர்ட்தான் காரணம் என்கிறார்கள். ஆம், ‘உதயநிதி ஸ்டாலினுக்கு எவ்வித கூடுதல் முக்கியத்துவமும் தர வேண்டாம். அப்படிச் செய்வது கட்சியினரிடம் சோர்வையும் எரிச்சலையும் ஏற்படுத்தி வரும் தேர்தலில் வெற்றிவாய்ப்பை பாதிக்கும்’ என்பதுதான் இந்த ரிப்போர்ட்டின் சாராம்சம்.

காலம் காலமாக ஒரே குடும்பம்தான் கட்சியில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்று கட்சி நிர்வாகிகள் கடுப்புடன் பேசிக்கொள்வதை, அப்படியே ஸ்டாலினிடம் பதிவு செய்துவிட்டதாம் ஐபேக்.

தோல்வி கிடைத்துவிடும் என்றதும், சொந்த மகனையே தள்ளி வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதேநேரம்… ஸ்டாலின் சொன்னாலும் கேட்க மாட்டேன். என் மகனை தேர்தலில் இறக்கியே தீருவேன் என்று கிச்சன் கேபினட் உறுதியாக இருக்கிறதாம். தி.மு.க.வை தோற்கடிக்க இவர்களே போதும்.