காதலியை பார்க்க காதலி வீட்டுக்கு சென்ற இளைஞனுக்கு காதலி தாயாரால் காத்திருந்த அதிர்ச்சி! சென்னை பரபரப்பு!

கோவையில் இருந்து புது காதலியை பார்க்க சென்னை வந்த இளைஞருக்கு மாமியார் வீட்டில் செம உபசரிப்பு கொடுத்து அனுப்பிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.


கோவையை சேர்ந்த இளைஞர் மற்றும் சென்னையை சேர்ந்த +2 மாணவி இருவரும் இன்ஸ்டாகிராமில் நண்பர்களாக அறிமுகமாகி பின்னர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 6 மாதங்களாக ஒருவருக்கொருவர் பதிவு மூலம் வளர்த்து வந்த காதல் இருவரையும் நேரில் சந்திக்க தூண்டியுள்ளது. இதை அடுத்து மாணவியை பார்ப்பதற்காக கோவையில் இருந்து மெனக் கட்டு சென்னை கே.கே.நகர் வந்தார் அந்த இளைஞர்.

பின்னர் இருவரும் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். இந்தக் காட்சியை பார்த்து விட்ட மாணவியின் தாய் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் அந்த இளைஞனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். 

தாங்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலித்து வருவதாகவும் நேரில் சந்திக்க விருப்பப்பட்டு சென்னைக்கு வந்ததாகவும் தெரிவித்தார் அந்த இளைஞர். இதையடுத்து கோவையில் உள்ள இளைஞரின் தந்தைக்கு தகவல் தரப்பட்டு அவர் சென்னை கே.கே.நகர் காவல் நிலையம் வந்து நடந்ததை தெரிந்து கொண்டார்.

பின்னர் இளைஞரை போலீசார் எச்சரித்து அவரது தந்தையுடன் அனுப்பி வைத்தார். மாணவி அழைத்ததின் பேரிலேயே வந்ததாக அந்த இளைஞர் இங்கு வந்ததாக தெரிவித்தபோதும் மாணவியை போலீசார் எச்சரித்ததாக தெரிவியல்லை. சட்டம் தன் கடமையை செய்வது நிபந்தனைகளுக்கு உட்பட்டதா என கேட்க வேண்டாம்.