குறுக்கே வந்த கார்..! மோதமல் இருக்க டிரைவர் செய்த செயல்..! டிவைடரில் மோதி உயரத்தில் பறந்த இன்னோவா! பதற வைக்கும் விபத்து!

குறுக்கே வந்த கார் மீது மோதாமல் இருக்க அதிவேகமாக சென்று கொண்டிருந்த காரை திருப்பியபோது சாலைத் தடுப்பில் மோதி 10 அடி உயரத்திற்கு கார் பறந்த பரபரப்பு சம்பவம் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.


குஜராஜ் மாநிலம் ராய்பிப்லா அருகே உள்ள குன்வாரா கிராமத்தில் அதாவது நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. வெறிச்சோடி இருக்கும் இந்த சாலையில் பெட்ரோல் பங்கிற்கு செல்வதற்காக ஒரு கார் சாலையை கடக்கிறது. அப்போது அந்த நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார் சாலையைக் கடக்க முயன்ற கார் மீது மோதமால் இருக்க திடிரென இடதுபுறம் திரும்புகிறது.

சாலையின் இடதுபுறத்தில் இருந்த தடுப்பை ஓட்டுநர் கவனிக்காததால் அதன் மீது அந்த கார் மோதியதில் சுமார் 10 அடி உயரத்திற்கு பறந்து போய் விழுகிறது. மேலும் அந்த கார் கவிழ்ந்து பலமுறை உருண்டோடுகிறது. அதே சமயம் அந்த காரில் பயணித்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அதற்கு காரணம் காரில் இருந்த அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருந்ததாக போலிசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்த காட்சிகள் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியிருந்தது. தற்போது, அந்த காட்சிகளை பார்க்கும் வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் சாலையை கடக்கும் வாகனங்கள் 10 விநாடிகள் செலவு செய்து மற்ற வாகனங்கள் வருகிறதா என பார்த்துவிட்டு திரும்பினால் மற்றவர்களுக்கும் ஆபத்து இல்லை. ரயில்வே தண்டவாளத்தை எப்படி எச்சரிக்கையோடு கடக்கிறோமோ அதே போல் நெடுஞ்சாலையிலும் கவனமாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு