வலியால் துடித்து துவண்ட நல்ல பாம்புக்கு ஆப்பரேஷன்! ஆனால் குணமடைந்த பிறகு புத்தியை காட்டிய விபரீதம்! அதிர்ந்த மதுரை டாக்டர்கள்!

மதுரையில் அடிபட்ட நல்ல பாம்புக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பாதுகாப்பாக வனத்துக்குள் கொண்டுவிட்டுள்ளனர்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அடிபட்ட நல்ல பாம்பு ஒன்று மக்கள் வசிக்கும் பகுதிக்கு மெதுவாக ஊர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் அதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பாம்பை மீட்டு வனத்துறையினர் பாம்பிற்கு மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை செய்து மீண்டும் வனதுக்குள் கொண்டு விட்டுள்ளனர். 

முனியாண்டிபுரம் குடியிருப்பு பகுதிக்குள் நல்ல பாம்பு ஒன்று உடலில் பலத்த காயங்களுடன் மெதுவாக ஊர்ந்து வந்துள்ளது. அதை எதிர்பாராத விதமாக அந்த வழியே சென்ற கிராமவாசி ஒருவர் கண்டுள்ளார். இதையடுத்து அப்பகுதியில் பாம்பு இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் ஒன்று கூடி பாம்பை விரட்ட முயன்றுள்ளனர் அப்போது பாம்புக்கு பலத்த அடி ஏற்பட்டுள்ளதை பார்த்துள்ளனர்.

இதையடுத்து உடனே திருநகர் ஊர்வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த அமைப்பில் இருந்து வந்த நபர்கள் பாம்பை வெற்றிகரமாக பிடித்து பரிசோதித்தனர் அப்போது அந்த பாம்பிற்கு பலமான அடி பட்டிருப்பதாகவும் அறுவை சிகிச்சை செய்து தான் பாம்பின் உயிரை காக்க முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பாம்பை பையில் எடுத்துக்கொண்டு மதுரை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சுமார் 2 மணிநேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர் பாம்பு மயக்கம் தெளிந்தவுடன் மருத்துவர்கள் அதை பரிசோதித்துள்ளனர். பாம்பு எப்போதும் போலவே கூற ஆரம்பித்தவுடன் பாம்பு மருத்துவமனையிலிருந்து வனத்துக்குள் கொண்டு சென்று விடப்பட்டது. பாம்புக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.