செல்ஃபி மோகத்தால் பறிபோகும் உயிர்கள்! உலகிலேயே இந்தியாவுக்கு தான் முதலிடமாம்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

தற்போது உலக அளவில் செல்பி மோகம் அதிகரித்து வரும் நிலையில் செல்பி எடுப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளில் அதிகமான உயிரிழப்புகள் இந்தியாவில் தான் நடக்கிறது என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


பொதுவாக இளைஞர்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் இருக்கும் அனைவருமே தங்களின் செல்பி புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் தொடர்பான ஒரு இதழில் வெளியாகியுள்ள அறிக்கையில் இந்தியாவில் மட்டுமே அதிக அளவு மக்கள் செல்பி எடுப்பதாகவும் அதனை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாகவும் ,அந்த இதழில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2011 முதல் 2017 வரை  உலகம் முழுவதும் 259 பேர் செல்பியால் உயிரிழந்திருப்பதாகவும் இந்தியாவில் மட்டும் 159 உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியர்கள் செல்பி எடுப்பதற்காக எந்த ஒரு துணிச்சலையும் எதிர்கொள்ள தயங்க மாட்டார்கள் எனவும் ரயில் முன் செல்பி எடுப்பது மற்றும் பறக்கும் விமானத்தில் செல்பி எடுப்பது மற்றும் பாறையின் மேல் ஏறி நின்று செல்பி எடுக்கும் போது கால் தவறி பல உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளது.

தற்போது 'டிக் டாக்' போன்ற செயலிகளை பயன்படுத்துவதாலும் உயிரிழப்புகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன.

சமீபத்தில் "பப்ஜி" என்ற விளையாட்டை விளையாடிய மாணவன் அதிக நேரத்தை அதில் செலவிட்டதால் கழுத்து நரம்பு அறுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழவைத்தது. இந்நிலையில் இந்தியாவில் மட்டுமே செல்பி மோகத்தால் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்