12 விமானங்கள் மூலமாக 21 நிமிடங்களில் பாகிஸ்தானின் ஒட்டு மொத்த ஆட்டத்தையும் விமானப்படை முடித்துள்ளது.
12 விமானங்கள்! 21 நிமிடங்கள்! பாகிஸ்தான் கதையை முடித்த இந்திய விமானப்படை!

இன்று அதிகாலை குவாலியரில் இருந்து இந்திய விமானப்படையின்
மிராஜ் 2000 ரக விமானங்கள் சுமார் 12 பாகிஸ்தானை நோக்கி புறப்பட்டன. மிகச்சரியாக அதிகாலை
3.43 மணிக்கு பாகிஸ்தானுக்குள் விமானங்கள் நுழைந்துள்ளன.
இந்திய போர் விமானங்களின் நிலவரம் குறித்து தெரிவிக்க காஷ்மீரில்
இருந்து ஆளில்லா விமானம் ஒன்றும் புறப்பட்டுள்ளது. அந்த ஆளில்லா விமானம் மூலமாக இந்திய
விமானப்படை விமானங்களின் செயல்பாடுகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன.
பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த மறு நொடி அதாவது சரியாக அதிகாலை
3.43 மணிக்கு மூன்று வெவ்வேறு இடங்களில் இந்தியாவின் மிராஜ் 2000 ரக விமானங்கள் லேசர்
மூலமாக செயல்படும் வெடிகுண்டுகளை சரமாரியாக போட்டுள்ளன.
என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்குள் அங்கிருந்த தீவிரவாத
முகாம்கள் அனைத்து அழித்து ஒழிக்கப்பட்டன. சுமார் 20 நிமிடங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள்
இருந்தபடி சுமார் ஆயிரம் கிலோ எடை வரையிலான குண்டுகளை வீசிவிட்டு சிறிய கீரல் கூட இல்லாமல்
இந்திய விமானங்கள் இந்தியாவிற்கு திரும்பின.
அதாவது வெறும் 12 விமானங்களை கொண்டு, 21 நிமிடங்களுக்குள்
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழித்ததோடு சுமார் 300 தீவிரவாதிகளையும் காவு வாங்கியது
இந்திய விமானப்படை.
இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த
ராடார் கண்காணிப்பையும் மீறி உள்ளே சென்று இந்தியாவிற்குள் பத்திரமாக திரும்பியதன்
மூலம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டுள்ளது.