முதல் இடத்தில் இந்தியா! பெருமைப்பட எதுவும் இல்லீங்க, இது குழந்தைகள் பாலியல் குற்றத்தில் இந்தியாவுக்கு முதல் இடம்!

குழந்தைகள் பாலியல் குற்றங்களில் முதலிடம் பிடித்தது இந்தியா.


இந்தியாவில் குழந்தைகள் மரணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ள லான்செட் என்ற மருத்துவ இதழ், 2000 ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்தியாவில் ஐந்து வயதை எட்டுவதற்குள் 12 லட்சம் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும், 2015 ஆண்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் உலகளவில் இந்தியா தான் முதலிடத்தில் இருந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பல கிராமங்களில் இன்றளவும் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு செல்லும் சரியான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால், மக்களுக்கு மருத்துவ வசதி கிடைப்பது தாமதமாகிறது. இந்த குழந்தைகள் மரணத்தில் பாதியளவு உத்தரப்பிரதேசம், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் என மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி 2015 ஆம் ஆண்டில் 1000 குழந்தைகள் பிறப்பில், மத்தியப் பிரதேசத்தில் 62 குழந்தைகள் இறந்துள்ளதாகவும். கேரளாவில் ஆயிரத்துக்கு ஒன்பது குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளதாக தெரிவிக்கிறது இந்த அறிக்கை. அசாம், ஒடிசா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் மரணம் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகமாகவும்.

தமிழ்நாடு, மகாராஷ்டிரம், பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் மரணம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. விவசாய சீர்திருத்தங்கள், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கல்வி, முழு அளவில் அலுவலர்கள் பணியாற்றும் ஆரம்ப சுகாதார மையங்கள், அதிக அளவிலான மருத்துவமனைகள் மற்றும் படுக்கைகள், சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகளில் அதிக முதலீடு ஆகியவற்றில் தென்னிந்திய மாநிலங்கள் ஓரளவு வெற்றி கண்டிருந்தாலும்.

வட மாநிலங்களில் இன்னும் முதற்கட்ட மருத்துவ வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் பல உள்ளதாக அறிவிக்கப்பட முடிகிறது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், சுகாதார கட்டமைப்பு வசதிகளைப் பராமரிப்பது கடினமான விஷயமாக உள்ளதாகவும். உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மாநில அரசுகள் சரியான வழிமுறைகள் செய்யவில்லை என்று சொல்கிறார் இந்திய பொது மக்கள் சுகாதார நிலைய இயக்குநர் பேராசிரியர் மவலங்கர்.

மேலும் அவர் கூறுகையில் மருத்துவ மையங்களில் பிரசவம் பார்ப்பதில் தென்னிந்தியா மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது என்றும். குறிப்பாக கேரளா 99.9%, தமிழகம் 99% மாநிலங்கள் ஏறத்தாழ முழுமையாக, மருத்துவ வசதிகளை எட்டியுள்ளன என்று கூறுகின்றார்.

இந்நிலையில். பாஜக ஆட்சிக்கு வந்த 2014க்குப் பிறகான காலகட்டத்தில், இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் மீது உடல் ரீதியான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் துன்புறுத்தல் என்ற தலைப்பில் ஐ.நா.வின் குழந்தை உரிமை அமைப்பு வெளியிட்டிருக்கும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் 4 லட்சம் குழந்தைகளின் நிலை மிகவும் அபாயகரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரத்தின் அடிப்படையில், 2017ஆம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 4,857 குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாகவும், 30,123 குழந்தைகள் கற்பழிக்கப்பட்டு உள்ளதாகவும்.

இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு நாளும் 96 குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் மத்தியப் பிரதேசத்தில்தான் அதிகபட்சமாக 1,638 வழக்குகள் பதிவாகியுள்ளது. அஸ்ஸாமில் 1,127 வழக்குகள் பதிவாகியுள்ளன. காவல்நிலைய புகார் அடிப்படையில் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 179 ஆக உள்ளது,

இப்படி குழந்தைகள் பாலியல் கொடூரங்களால் பாதிக்கப்பட்டாலும். அவர்களை பாதுகாக்க 2012 வரை இந்தியாவில் சரியான சட்டங்கள் இயற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினர் கொடுக்கும் வழக்கைப் பதிவு செய்ய மறுக்கும் போலீஸாருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012 நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்துக்கான முதல் விரிவான சட்டத்தை அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. 

இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2012-2016 வரையில் புகார் அளிக்கப்பட்ட பாலியல் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் கூறுகின்றன.

இந்த குழந்தைகள் பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் நோக்கிலும் போக்சோ சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் இந்த மோசோதாவில் சில கடுமையான தண்டனைகளை விதிக்கக்கூடிய சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டு பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியிருந்த நிலையில். தற்போது போக்சோ சட்டத்திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது மத்திய அரசு.

திருத்தப்பட்ட புதிய மசோதாவின்படி குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்கள் தயாரிப்பது, சமூக ஊடகங்களில் வெளியிடுவது, அதை வைத்து வர்த்தக நோக்கில் செயல்படுவது என குழந்தைகளுக்கு எதிரான எந்த செயல்களில் யார் ஈடுபட்டாலும். அதிகப்படியான தண்டனை விதிக்க முடியும் என்கிறது இந்த புதிய சட்ட வரைவு.

போக்ஸோ சட்டம் 2012 பிரிவு 2,4, 5,6,9,14,15,34,42,45 இந்த பிரிவுகளின் கீழ்தான் தற்போது சட்டதிருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் . குற்றவாளிக்கு குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அதிகபட்சமாக மரணதண்டனை வரை கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் அறிக்கை ஒன்று.

தமிழகத்தின் பொள்ளாச்சி சம்பவத்திலும் உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்திலும் நடைபெற்ற பாலியல் சம்பவத்தால் நாடே தலைகுனிந்து போயுள்ள இந்த வேளையில். குழந்தைகளுக்கான பாலியல் குற்றங்களில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ள இந்த செய்தியை. இந்திய மக்களிடத்தில் இருந்து மறைந்துள்ளன இந்திய அரசும் அதற்கு துணையாக விலைக்கு போன இந்திய ஊடகங்களும்.

மணியன் கலியமூர்த்தி