30 வயது இளைஞனுடன் 38 வயது பெண்ணுக்கு தகாத உறவு! கண்டுபிடித்த கணவனுக்கு அரங்கேறிய கொடூரம்!

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


திருவண்ணாமலை மாவட்டம்  மேல் வயலாமூரை சேர்ந்த குணசேகரன் விவசாயம் செய்துவந்தவர். மனைவி காந்திமதி (வயது 38) இருவருக்கும்  ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் காந்திமதி அதே பகுதியை  சேர்ந்த 30 வயது மதிக்கதக்க கார்த்திகேயன் என்பவரோடு வரம்பு மீறி பழகுவதாக  குணசேகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அடிக்கடி  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் காந்திமதி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. மீண்டும் சேர்ந்து வாழ கடந்த 20 ஆம் தேதி வீட்டிற்க்கு திரும்பியுள்ளார் காந்திமதி. ஆனால் காந்திமதி மீண்டும் தனது 30 வயது கள்ளக் காதலனை சந்தித்துள்ளார்.

இதனால் மீண்டும் காந்திமதிக்கும் அவரது கணவருக்கும் நேற்று இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆத்திரமடைந்த காந்திமதி தூங்கிக்கொண்டிருந்த கணவரின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவலூர்பேட்டை போலீசார்  மனைவி காந்திமதியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் தனது தகாத உறவுக்கு குணசேகரன் இடையூறாக இருந்ததால் அவரை  காந்திமதியும், கார்த்திகேயனும் சேர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் வைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும்  தலைமறைவாகியுள்ள  கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.