அண்ணனின் உடல் சார்ந்த தவறான தேடல்..! தங்கை உயிரை காவு வாங்கிய பயங்கரம்! தவிக்கும் 5 மாத குழந்தை!

நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர் மீது ஏற்பட்ட கோபத்தை அவரது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெட்டி தீர்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதி பஸ் நிலையத்தில் பழகடை வைத்து நடத்தி வருபவர் விமல் ராஜ். இவருக்கும் அனிதா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏழு மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் விமல்ராஜ் நாமக்கல்லில் தனது மாமனார் கருப்பசாமி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று விமல்ராஜ் வீட்டிற்குள் சென்று கணவன் மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டியது. தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியும் அக்கும்பல் வெட்டி விட்டு சென்றது. இதில் விமல் ராஜ் அனிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கருப்பசாமி தீவிர சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் இறந்த விமல்ராஜ் அனிதாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அனிதாவின் குடும்பத்தினருடன் விசாரணையில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் தப்பி ஓடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். அனிதாவின் குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணை பின்வருமாறு,

நாமக்கல் பஸ் நிலையம் அருகில் எலக்ட்ரிக்கல் கடையை நடத்தி வருபவர் நிக்கல்சன். இவருக்கும் அனிதாவின் அண்ணனான அருண் என்பவருக்கும் தொழில் ரீதியாக நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அருண் கோவையில் எலக்ட்ரிக்கல் பார்ட்ஸ் விற்பனையை அடிப்படையாக செய்து வருகிறார்.

இதனை கொண்டு கோவையிலிருந்து சொந்த ஊரான நாமக்கல்லுக்கு வரும்போதெல்லாம் நிக்கல்சனை அருண் சந்தித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் மனைவியுடன் அருணுக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அதிகமாகி கள்ளக்காதலாக மாறிய நிலையில் நிக்கல்சன் தனது மனைவியை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் விமல்ராஜ் இடம் சென்று உமது மைத்துனனை கண்டிக்குமாறு கூறி விட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முதல் நிக்கல்சன் மனைவி மாயமாகியுள்ளார். இதுகுறித்து அருண்-க்கு கால் செய்து பேசிய பொழுது தனது மனைவியை காணவில்லை அதற்கு நீதான் காரணம் உன்னோடு தனியாக சந்தித்து பேசவேண்டும் என்று கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து உள்ளார். அதற்கு அருண் மறுக்கவே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நிக்கல்சன் அருண் அவரது தந்தை வீட்டில் தான் இருப்பார் என்று நினைத்து விமல்ராஜ் வீட்டிற்கு கூலி படையுடன் சென்றுள்ளார்.

அங்கு அருண் இல்லாததை கண்டு ஆத்திரமடைந்த அவர் அவரது தங்கை அனிதா தங்கையின் கணவர் விமல்ராஜ் மற்றும் அருணின் தந்தை கருப்பசாமி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு கூலி படையுடன் தப்பிச் சென்றுள்ளார். அருண் மீதுள்ள கோபத்தை அவரது ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் நிக்கல்சன் காட்டி விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமல்ராஜ் - அனிதா தம்பதிக்கு கடந்த ஆண்டு திருமணமாகி ஐந்து மாதத்தில் குழந்தை உள்ள நிலையில் தற்போது அந்த குழந்தை தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.